பெங்களூர்: கடந்த சில தினங்களாகவே வெள்ளத்தில் மிதந்து வரும் டெக் சிட்டியான பெங்களூரில், ஒரே நாள் இரவில் 130 மிமீ மழை கொட்டி தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் டிராக்டர்களில் பயணம் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.
குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை இருந்து வருகின்றது.
ஏற்கனவே பல ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி கொடுத்துள்ள நிலையில், கட்டாயம் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் சிலர் உள்ளனர். எப்படியிருப்பினும் அதிகளவில் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வர முடியாத நிலை உள்ளது.
மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா?
டெலிவரி செய்ய முடியாது
வெளியே வர முடியாத சூழலில் பலரும் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களை நாடத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த இக்கட்டான சூழலில் உணவு மற்றும் மளிகை டெலிவரி செய்யும் ஆப்கள் ஆர்டர்களை சில இடங்களில் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற குற்ற சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.
விளம்பரங்கள் ஏன்?
நிறுவனங்கள் விரைவில் டெலிவரி செய்வோம். குறிப்பாக கால நேரம் பாராமல், மழை, வெயில் பாராமல் டெலிவரி செய்கிறோம் என விளம்பரம் செய்கின்றன. ஆனால் டெலிவரி செய்வதில் தாமதம் செய்கின்றன. சில நேரங்களில் ஆர்டர்களை எடுத்துக் கொள்வதில்லை என்றும் பெங்களூர் வாசிகள் குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளனர்.
கடும் பாதிப்பு
இது குறித்து ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தலைவர், கார்த்திக் குருமூர்த்தியின் ட்வீட்டில், சில இடங்களில் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சர்ஜாபூர், மாரத்தஹள்ளி, பெல்லந்தூர் உள்ளிட்ட சில இடங்களில் மழை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
கண்டிப்பாக டெலிவரி செய்வோம்
இன்று முடிந்த மட்டில் பல ஆர்டர்களை வழங்க எங்களது விற்பனையாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்களை நம்புங்கள்.. உங்கள் ஆர்டர்கள் தாமதமாகலாம். ஆனால் டெலிவரி செய்வோம் என்று கார்த்திக் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்,
பிளிப்கார்ட்
பல கார்ப்பரேட் நிறுவனங்களும், பிளிப்கார்ட் உள்பட பலரையும் வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன. நிறுவனங்கள் தற்போதைய நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, எங்களது ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என பிளிப்கார்ட் தரப்பில் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சவலான காலக்கட்டங்களில் நிச்சயம் ஊழியர்கள் சரியான நேரத்தில் ஆர்டர்களை பெறுவது சாத்தியமில்லை என்று தான் கூஆ வேண்டும்.
Delivery apps not accepting food, grocery orders: bangaluru residents complain
Delivery apps not accepting food, grocery orders: bangaluru residents complain/ஆள விடுங்க.. இப்போதைக்கு உணவு, குரோசரி டெலிவரி கிடையாது.. டெலிவரி நிறுவனங்கள் கைவிரிக்கிறதா?