இந்த 6 பங்குகளை வாங்கி போடுங்க.. விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம்.. !

சர்வதேச அளவில் மெதுவான வளர்ச்சி இருந்து வந்தாலும், இந்தியாவில் ஓரளவுக்கு வளர்ச்சி விகிதமானது மேன்மையடைய தொடங்கியுள்ளது எனலாம். சர்வதேச அளவிலான தாக்கம் இந்தியாவில் இல்லை எனலாம். இத்தகைய சூழலில் பங்கு சந்தை முதலீடு எப்படி இருக்கும்? இந்த சமயத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால் இந்த காலகட்டத்திலும் சில பங்குகளை வாங்கி வைக்கலாம் என ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தினையொட்டி, 6 பங்குகள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தரகு நிறுவனம் சுட்டி காட்டியுள்ளது.

டிக்டாக் நிறுவனத்தின் அதிரடி பணிநீக்கம்.. அதிர்ச்சியில் சீன ஊழியர்கள்..!

மாருதி சுசூகி

மாருதி சுசூகி

இந்த விழாக்கால பருவத்தில் கார்களின் தேவையானது அதிகரிக்கலாம். இதனால் கார் விற்பனையானது அதிகரிக்கலாம். கடந்த காலாண்டுகளை காட்டிலும் மூலதன பொருட்களின் விலையானது குறைந்துள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது. இதனால் நிறுவனங்களின் செலவினமும் குறையலாம். இது மார்ஜின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம். இன்றும் இந்தியாவில் முன்னணி வாகன விற்பனையாளராக இருக்கும் மாருதி சுசூகி, வரவிருக்கும் காலாண்டில் வலுவான வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் தரகு நிறுவனம் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையை 9801 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ் தனது வணிகத்தினை டிஜிட்டல் மயமாக்கி வரும் நிலையில், இதன் வளர்ச்சி எதிர்காலத்தில் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் தரகு நிறுவனம் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையினை 8250 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.

எஸ்பிஐ கார்ட்ஸ்
 

எஸ்பிஐ கார்ட்ஸ்

எஸ்பிஐ கார்ட்ஸ்-ன் வணிகம் தொடர்ந்து வலுவான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், இதன் நிகர வட்டி வருவாயும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இதன் மார்ஜின் விகிதமும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிரெடிட் கார்டினையும் யுபிஐ சேவையில் பெறலாம் என்ற அறிவிப்புக்கு மத்தியில், இதன் வளர்ச்சி விகிதம் மேன்மையடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இதன் இலக்கு விலையை 1050 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

ட்ரெண்ட்

ட்ரெண்ட்

பிரபலமான பிராண்ட் நிறுவனமான ட்ரெண்ட், தொடர்ந்து அதன் வி நியோக சங்கிலியை மேம்படுத்த முயற்சி செய்து வருகின்றது. தொடர்ந்து அதன் வணிகத்தினை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கிடையில் இதன் இலக்கு விலையை 1530 ரூபாயாக தரகு நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

ரிலாக்ஸோ

ரிலாக்ஸோ

ரிலாக்ஸோ மற்றும் விமார்ட் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது மேம்படலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இருந்து வளர்ச்சி மேன்மையடையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ரிலாக்ஸோ வளர்ச்சி விகிதம் மேன்மையடையலாம் என தரகு நிறுவனம் கருதுகின்றது. இதன் இலக்கு விலையினை 1120 ரூபாயாக தரகு நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இதே விமார்ட்- ன் இலக்கு விலையை 3350 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Six stocks to buy this festival season: Axis securities

Six stocks to buy this festival season: Axis securities/இந்த 6 பங்குகளை வாங்கி போடுங்க.. விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம்.. !

Story first published: Wednesday, September 7, 2022, 20:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.