டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி அவர்கள் சமீபத்தில் கார் விபத்தில் பலியானதையடுத்து சாலை பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் இருக்க வேண்டும் என்ற விதியை இறுதி செய்ய உள்ளதாக சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்பது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 6 பங்குகளை வாங்கி போடுங்க.. விழாக்கால பருவத்தில் அதிகரிக்கலாம்.. !

சாலை பாதுகாப்பு
இந்திய சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் சைரஸ் மிஸ்ட்ரி கார் விபத்தில் இறந்த சம்பவம் சாலை பாதுகாப்புகளை விரைந்து செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு காரிலும் 6 ஏர்பேக்குகள்
சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகள் வரும் ஜனவரி மாதத்துக்குள் இறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கார் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு
ஆனால் இதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் இதனால் கார் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசு சமரசரம் செய்யாது என்றும் கட்டாயம் புதிய விதிகள் குறித்த உத்தரவு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

அலாரம் அமைப்பு
மேலும் கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கை பெல்ட்களை பயன்படுத்துவதற்கு அலாரம் அமைப்பை நிறுவுவதை கட்டாயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அனைத்து மக்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்று கூறியுள்ள சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர்பேக்குகள் குறித்த விதி இறுதி செய்யப்படும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

விபத்துக்கள் குறையும்
புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டால் 2024 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் மற்றும் சாலை விபத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் பாதியாகக் குறையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

செலவு அதிகரிக்குமா?
தற்போது கார்களில் இரண்டு ஏர்பேக்குகள் அதாவது ஓட்டுநர் மற்றும் முன் பயணிக்கு தலா ஒன்று என்பது கட்டாயமாக உள்ளது. மேலும் நான்கு ஏர்பேக்குகளை சேர்த்தால் $75க்கு மேல் செலவாகாது என்று அரசாங்கம் மதிப்பிடுகிறது. இருப்பினும், வாகன சந்தை தரவு வழங்குநரான JATO டைனமிக்ஸ் 6 ஏர்பேக்குகள் வைக்க குறைந்தபட்சம் $231 செலவை அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.
India aims to finalise six-airbags rule by year-end to beef up road safety
India aims to finalise six-airbags rule by year-end to beef up road safety | இனி ஒவ்வொரு காரிலும் இது கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு!