எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.. எல்லாம் சாதகம் தான்.. ரஷ்யா அதிபர் பரபர கருத்து!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், உலக நாடுகள் பலவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மோதல் பிரச்சனைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு எந்த இழப்பும் இல்லை என கூறியுள்ளார்.

எனினும் உண்மையில் அதன் உலகளாவிய செல்வாக்கை மீட்டெடுக்கும் ஒரு புதிய இறையாண்மை போக்கை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று கூறப்படும் இந்த தாக்குதலில், ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாகவும் எதையும் இழக்கவில்லை என்றும் புதின் கூறியுள்ளார்.

கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி..? அதன் நன்மைகள் என்ன..?

நம்மை வலுப்படுத்தும்

நம்மை வலுப்படுத்தும்

மேலும் நாங்கள் எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்கவும் மாட்டோம். தேவையற்ற, தீங்கு விளைவிக்கும் மற்றும் முன்னேற விடாமல் தடுக்கும் அனைத்தும் நிராகரிக்கப்படும் என கூறியுள்ளார்.

நாம் பெற்றதை பொறுத்தவரையில், இது நம் இறையாண்மையை வலுப்படுத்தியுள்ளது என என்னால் கூற முடியும். தற்போது நடப்பதன் விளைவை யாராலும் தவிர்க்க முடியாது. அது இறுதியில் நம்மை உள்ளிருந்து பலப்படுத்தும் என கூறியுள்ளார்.

உக்ரைன் திட்டம்

உக்ரைன் திட்டம்

ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் குடியரசின் அங்கமாக இருந்ததுதான் உக்ரைன். இந்த நாடு இதுவரை நேட்டோவில் உறுப்பினர் ஆகவில்லை. எனினும் நேட்டோ நேச நாடாக உள்ளது. இது எதிர்காலத்தில் நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் எதிர்பார்ப்பு
 

ரஷ்யாவின் எதிர்பார்ப்பு

ஆனால் அப்படியொரு சம்பவம் நடக்கவே கூடாது என்ற உத்தரவாதத்தை மேற்கத்திய நாடுகள் தர வேண்டும் என ரஷ்யா எதிர்பார்த்தது. ஆனால் மேற்கத்திய நாடுகள் அத்தகைய உத்தரவாதத்தினை கொடுக்கவில்லை. மாறாக உக்ரைனுக்கு தங்களது ஆதரவை வழங்கி, நட்பு நாடாக பார்த்து வருகின்றன. இது ரஷ்யாவின் கோபத்தினை மேற்கொண்டு அதிகமாக தூண்டியது.

புடினின் வாதம் இது தான்

புடினின் வாதம் இது தான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் தமது ஆர்வத்தில் தங்கள் நாடு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது அத்துமீறி நுழைவதற்கு, நேட்டோ அமைப்பைப் பயன்படுத்துவதாக அதிபர் புடின் கூறிவந்தார். மொத்தத்தில் இந்த வாய்வழி பிரச்சனையானது, தற்போது ராணுவ நடவடிக்கையாக கடந்த பிப்ரவரி 24,2022ல் மாறி பல மாதங்களாக நீடித்து வருகின்றது. இன்று வரையிலுமே இவ்விரு நாடுகளும் பின் வாங்குவதாக இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russian President says Russia has gained, not lost amid Ukraine conflict

Russian President says Russia has gained, not lost amid Ukraine conflict/எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.. எல்லாம் சாதகம் தான்.. ரஷ்யா அதிபர் பரபர கருத்து!

Story first published: Wednesday, September 7, 2022, 17:45 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.