பென்ஷன் இல்லாமல் பணி செய்யும் ஊழியர்களின் நிதி பாதுகாப்புக்காக புதிய பென்ஷன் பிளஸ் என்ற திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்தவர்கள் தங்கள் ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கும் வகையில் இருக்கும்.
இந்த திட்டம் நேற்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த திட்டத்தின் ஆரம்ப விழாவில் எல்ஐசி மற்றும் செபி நிறுவனங்களின் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெறும் 1000 டாலர்.. SpaceX-க்கு போட்டியாக ISRO..!
புதிய பென்ஷன் பிளஸ் திட்டம்
பென்ஷன் என்பது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் முக்கியமானது என்பதும் ஓய்வு காலத்தில் அதுதான் அவர்ளது அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பென்ஷன் இல்லாமல் நிதி பாதுகாப்பு இன்றி பணி செய்யும் ஊழியர்களின் நலனுக்காக புதிய பென்ஷன் பிளஸ் என்ற திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பங்குச்சந்தையுடன் தொடர்பு இல்லை
நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த திட்டம், பங்குச் சந்தையுடன் தொடர்பில்லாத திட்டம் என்பதால் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இந்த திட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. எனவே தைரியமாக இதில் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவுகள்
இந்த திட்டம் மொத்தமாக ஒரே தவணையில் செலுத்தும் முறை அல்லது மாதம் அல்லது காலாண்டு, அரையாண்டு முறையில் முதலீடு செய்யும் திட்டம் என இரண்டு பிரிவுகள் உள்ளது.
பிரிமியம் தொகை
பாலிசி காலம் மற்றும் பாலிசிதாரரின் வயது, முதிர்வு தொகை ஆகியவற்றை பொறுத்து பிரிமியம் தொகை செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் நான்கு வகையான நிதிகள் இதில் இருப்பதாகவும் இதில் பாலிசிதாரர் தங்களுக்கு விருப்பப்பட்ட நிதிகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி முதலீடு செய்வது?
இந்த திட்டத்தில் சேர்ந்த பணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு பின் பாதியாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும். இந்த பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய நேரடியாக எல்ஐசி அலுவலகத்திற்கு சென்றோ அல்லது எல்ஐசி ஏஜெண்டுகள் வாயிலாகவோ முதலீடு செய்யலாம். மேலும், https://licindia.in/ இணையதளம் வாயிலாகவும் முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு காலம்
நிலையான வருவாய் உள்ள இன்றைய இளைஞர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தால் அவரது ஓய்வு காலம் சுமை இன்றி சுகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
LIC launches New Pension Plus plan: Features, premium payment, NAV calculation
LIC launches New Pension Plus plan: Features, premium payment, NAV calculation | எல்.ஐ.சியின் புதிய பென்சன் பிளஸ் திட்டம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்?