ஓணம் பண்டிகை… பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியான ஷாக் அறிவிப்பு!

கேரள மாநிலத்தின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை (செப்., 8) கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவையொட்டி கேரள தேசம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கேரள- தமிழக எல்லை மாவட்டங்களான கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓணம் திருவிழா களைகட்டி உள்ளது.மலையாள மக்கள் குறிப்பிட்ட அளவு வசிக்கும் தலைநகர் சென்னையில் ஓணம் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன.

இந்த விழாவை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கெனவே நாளை (செப்.,8) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து சென்னையின் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகியவற்றுக்கும், ஈரோடு மாவட்டத்துக்கும் அண்மையில் விடுமுறை என தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், ஒணம் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை கிடையாது எனவும், அரசு அலுலவகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் நாளை வழக்கம் போல் செயல்படும் எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை என எண்ணி, வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்தால், அடுத்து சனி, ஞாயிறு வார இறுதி நாட்கள் என தொடர்ந்து நான்கு நாட்கள் சொந்த ஊருக்கு சென்று வரலாம் என்று திட்டமிட்டிருந்த வெளியூர், வெளிமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இவர்களை போன்றே ஓணத்துக்கு லீவு என்று எண்ணியிருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.