வேர்க்கடலை பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ். கடையில் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் அதை வீட்டிலேயே எந்தவித கலப்படமும் சேர்க்காமல் சுத்தமான எண்ணெய்யில் செய்து சாப்பிடலாம். குடும்பத்தோடு சாப்பிடுவது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்து சாப்பிட்டால் எப்படி சமைத்தோமோ அப்படியே மொறுமொறுவென்று இருக்கும். குழந்தைகளுக்கு மாலையில் கொடுக்க சிம்பிள் ஸ்நாக்ஸ் ரெடி. வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை – 1 1/2 கப்
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
வரமிளகாய் – 5
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் வேர்க்கடலையை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டு மற்றும் வரமிளகாயை தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு பிசைந்து கொள்ளவும். பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil