பெங்களூரு: பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி சட்டசபை தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.,வும், கர்நாடக வனத்துறை மற்றும் உணவு பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்தவர் உமேஷ் கத்தி,
மூத்த அமைச்சரான இவர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்றார். இரவில் டாலர்ஸ் காலனியில் உள்ள வீட்டிற்கு வந்தார். உணவு சாப்பிட்ட பின்னர் கழிப்பறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வராததால், சமையல்காரர் கழிப்பறை கதவை தட்டினார்.எந்த பதிலும் வராததால் மற்ற ஊழியர்களை அழைத்து வந்து கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது செயலற்ற முறையில் அமைச்சர் விழுந்து கிடந்தார்.
உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டண்ட் பொருத்தப்பட்டிருந்தது.தகவல் அறிந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement