குரு பவன் கட்டடத்துக்கு நிதியுதவிதங்கவயல் நகராட்சி தலைவர் உறுதி| Dinamalar

”தங்கவயல் குரு பவன் கட்டடம், இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா செய்வார். எனது பதவிக்காலம் இருக்கும் வரை எனக்கும், நகராட்சி உறுப்பினரான எனது மனைவிக்கும் கிடைக்கிற கவுரவ சம்பளத்தை குருபவன் கட்டட நிதிக்குவழங்குவேன்,” என,தங்கவயல் நகராட்சி தலைவர் முனிசாமி கூறினார்.

தங்கவயல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஆசிரியர்கள் தின விழா, ராபர்ட்சன்பேட்டை ‘குரு பவன்’ அரங்கில் நேற்று முன்தினம் கொண்டாடப் பட்டது. இதில், நகராட்சி தலைவர் முனிசாமி பேசியதாவது: அறிவுக் கண் திறந்தவர்கள் ஆசிரியர்கள். எனது ஆசிரியர்கள் உயிருடன் இருக்கின்றனரா என எனக்கு தெரியாது. அவர்களின் நினைவாக இங்குள்ள ஆசிரியர்களின் பாதங்களில் எனது அன்பை காணிக்கையாக அர்ப்பணிக்கிறேன்.ஆசிரியர்கள் 30 சதவீதமும், ஆசிரியைகள் 70 சதவீதமும் உள்ளனர். இவர்கள், மாணவர்களை ஒழுக்கத்துடன் வளர்க்கின்றனர்.

பெற்றோர் உயிர் கொடுத்தவர்கள்; உலக அறிவின் ஒளியை கொடுப்பவர்கள் ஆசிரியர்களே.ஏணியான ஆசிரியர்கள், இருக்கும் இடத்திலேயே நிற்கின்றனர். இவர்களுக்கு ‘ஈகோ’ கிடையாது. கம்ப்யூட்டர் எல்லா வேலைகளையும் செய்யலாம். அதை செய்வதற்குரிய அறிவை வழங்கியது ஆசிரியர்கள் ஆவர். சில ஆசிரியர்கள் வீட்டில் உள்ள நச்சரிப்பை, எரிச்சலை சில நேரங்களில் மாணவர்கள் மீதும் காட்டுவதுண்டு. எத்தனை பிரச்னைகள், சோதனைகள் இருந்தாலும், அவைகளை எல்லாம் மறந்து பள்ளியில், மாணவர்களுக்காக தியாகம் செய்கின்றனர். சகிப்புத் தன்மை உள்ளவர்கள்;பிறரை சாதனையாளர்களாக உயர்த்துபவர்கள் அவர்களே.

இந்த நேரத்தில், கல்வி கண் திறந்த காமராஜரை நினைத்து போன்ற வேண்டும். இலவச கல்வி, மதிய உணவு திட்டம், சீருடை முறையை அமலுக்கு கொண்டு வந்தவர். இன்று இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.தங்கவயல் குரு பவன் கட்டடம் இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா செய்வார். எனது பதவிக்காலம் இருக்கும் வரையில் எனக்கும், நகராட்சி உறுப்பினரான என் மனைவிக்கும் கிடைக்கிற கவுரவ சம்பளத்தை குரு பவன் கட்டட நிதிக்கு வழங்குவேன்.ஆசிரியர்களின் சாபத்தில் யாரும் விழக்கூடாது. மாணவர்களிடம் உள்ள திறனை அறிந்து, புதிய சமுதாயத்தை ஆசிரியர்கள் தான் உருவாக்குகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். வட்டார கல்வித் துறை அதிகாரி சந்திரசேகர், தாசில்தார் சுஜாதா உட்பட பலர் பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.