வெளிநாடுகளில் தமிழர்கள் உட்படப் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் பகுதியாக விளங்கும் சிங்கப்பூர் இருக்கும் இந்தியர்கள் தாய் நாட்டிற்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றால் குறைந்தது ஒரு நாள் ஆகும்.
இப்படியிருக்கையில் இதைச் சில நொடியில் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா, இதைச் சாத்தியமாக்கத் தான் இந்திய வங்கிகள், சிங்கப்பூர் வங்கி, இந்திய அரசின் முக்கிய அமைப்புகள் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
வெளிநாட்டில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் குடும்பப் பொருளாதார நிலையை மேம்படுத்தவே பணியாற்றி வருகின்றனர். இப்படியிருக்கும் நிலையில் அவசரமான காலகட்டத்தில் பணத்தை அனுப்புவோருக்கு இந்த நொடியில் பணத்தை அனுப்பும் சேவை பெரிய அளவில் பலன் அளிக்கும்.
எல்.ஐ.சியின் புதிய பென்ஷன் பிளஸ் திட்டம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்?
இந்தியா – சிங்கப்பூர்
இந்தியாவில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி உட்பட 5 உள்ளூர் வங்கிகள் தற்போது சிங்கப்பூர் DBS வங்கியுடன் இணைந்து ரியல் டைம் ரெமிட்டென்ஸ் சிஸ்டம் சேவை இந்தியாவின் UPI தளத்தின் வாயிலாக அளிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
paynow சேவை
இந்தக் கூட்டணி மூலம் சிங்கப்பூர் நாட்டின் paynow சேவை உடன் UPI தளத்தை இணைக்கப்பட்டு இரு நாடுகள் மத்தியிலான பேமெண்ட்-ஐ சில நிமிடங்களில் செய்யும் வாய்ப்பை உருவாக்கப்பட உள்ளது. இதனால் தற்போது 24 மணிநேரத்திற்கு அதிகமாக எடுக்கும் பேமெண்ட்-ஐ சில நொடிகளில் செய்யப்படும்.
NPCI அமைப்பு
UPI தளத்தை நிர்வாகம் செய்யும் NPCI அமைப்பின் கிளை நிறுவனமான NPCI International Payments Ltd இரு நாடுகள் மத்தியிலான பேமெண்ட்-ஐ சாத்தியப்படுத்த Monetary Authority of Singapore உடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்தச் சேவையின் சோதனை திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.
தனிநபர், நிறுவனங்கள்,
இந்தச் சேவை செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியா – சிங்கப்பூர் மத்தியிலான பணப் பரிமாற்றம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும், இதேவேளையில் வேகமாகவும் நடக்கும். அனைத்தையும் தாண்டி இந்த ரியல் டைம் பேமெண்ட் சேவை தனிநபர், நிறுவனங்கள், கடைகள் என அனைத்து தரப்பினருக்கும் அளிக்கப்பட உள்ளது.
தமிழர்களுக்கு ஜாக்பாட்
சிங்கப்பூரில் பிற நாட்டவர்களைக் காட்டிலும் தமிழர்களின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நிலையில் இத்தகைய சேவை சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களுக்கு ஜாக்பாட் ஆக இருக்கும். மேலும் இச்சேவையின் சோதனை வெற்றிபெற்றால் மலேசியா நாட்டிற்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
சென்னை டூ சிங்கப்பூர்
சென்னையில் உள்ளூர் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்கிற்கு இந்திய ரூபாயில் பணத்தை அனுப்பினால், வெளிநாட்டு வங்கிக் கணக்கின் உரிமையாளர் ரூபாயில் இருந்து மாற்றிச் சிங்கப்பூர் டாலராகச் செலுத்தும். இந்தச் செயல்முறை பொதுவாக ஒரு நாளுக்கு மேல் தேவைப்படும், இது அனைத்தும் ரியல் டைம்-ல் செய்யப்படும்.
Singapore – India real-time remittance payment; Jackpot for Indians especially tamilnadu people
Singapore – India real-time remittance payment; Jackpot for Indians especially Tamilnadu people சிங்கப்பூர் தமிழர்களுக்குக் குட்நியூஸ்.. இனி ஒரு நிமிடம் போதும்..!