சோமேட்டோ, ஸ்விக்கி-க்கு கடும் எதிர்ப்பு.. ஹோட்டல் உரிமையாளர்கள் வைத்த செக்..!

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது, கட்டுமான பொருட்கள் முதல் காண்டம் விற்பனை வரையில் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்திய உணவு சந்தையை ஏற்கனவே சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி ஆதிக்கம் செய்து வரும் நிலையில் தற்போது உணவகங்களின் நேரடி வர்த்தகத்திலும் இவ்விரு நிறுவனங்கள் நுழைய உள்ளது.

இதனால் உணவகங்கள் இனி சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது, இதை உணவகம் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை.. ஜோ பைடனிடம் லிஸ் ட்ரஸ் முக்கிய பேச்சுவார்த்தை!

சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி

சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி

சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனத்தின் புதிய Zomato Pay மற்றும் Swiggy Diner திட்டங்களைப் பேமெண்ட் ஆக உணவகங்கள் ஏற்பதற்கு முன்பு எச்சரிக்கையாக இருங்கள் என இந்தியத் தேசிய உணவக சங்கம் (NRAI) தனது உணவக உறுப்பினர்களுக்கு எச்சரித்தது உள்ளது. மேலும் இந்த NRAI அமைப்பு Zomato Pay மற்றும் Swiggy Diner திட்டங்களை வினோதமானது என்று அழைத்தது.

Zomato Pay மற்றும் Swiggy Diner

Zomato Pay மற்றும் Swiggy Diner

Zomato Pay என்பது ஹோட்டலில் சென்று சாப்பிடும் போது ஒருவர் சோமேட்டோ செயலியில் இருக்கும் பேமெண்ட் சேவையைப் பயன்படுத்திப் பணம் செலுத்துவது. இதேபோன்ற சேவையை ஸ்விக்கி நிறுவனம் Swiggy Diner என்ற பெயரில் வழங்குகிறது.

டிஸ்கவுன்ட்
 

டிஸ்கவுன்ட்

Zomato Pay மற்றும் Swiggy Diner ஆகிய இரண்டின் வாயிலாக ஒருவர் பேமெண்ட் செய்யும் போது அதிகப்படியான டிஸ்கவுன்ட் கிடைக்கும் காரணத்தால் மக்கள் இதைத் தவிர்க்க முடியாமல் பயன்படுத்தி வருகின்றனர். இது உணவகங்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உணவகங்கள்

உணவகங்கள்

Zomato Pay மற்றும் Swiggy Diner ஆகிய இரண்டின் வாயிலாக ஒருவர் பேமெண்ட் செய்யும் போது 15-40 சதவீதம் வரையில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இந்த டிஸ்கவுன்ட் தொகை உணவகங்கள் தான் ஏற்க வேண்டியுள்ளது.

4-12 சதவீதம் வரை கமிஷன்

4-12 சதவீதம் வரை கமிஷன்

ஆனால் உணவகங்களுக்கு இந்தப் பேமெண்ட் முறையை ஏற்பது மூலம் 4-12 சதவீதம் வரையில் கமிஷன் கிடைக்கிறது. ஆனால் பிற டிஜிட்டல் பேமெண்ட்-ல் குறைந்த கட்டணத்தில் சேவை கிடைக்கும் போது ஏன் இதைப் பயன்படுத்த வேண்டும் என NRAI அமைப்புக் கேள்வி எழுப்பியுள்ளது.

பேமெண்ட் சேவை

பேமெண்ட் சேவை

பிற டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் வெறும் 1 முதல் 1.5 சதவீதம் வரையில் மட்டுமே கட்டணம் செலுத்தப்படுகிறது, இப்படியிருக்கையில் எதற்காக 40 சதவீத டிஸ்கவுண்ட் ஏற்றுக்கொண்டு 12 சதவீத கமிஷனை பெற வேண்டும் என NRAI கேள்வி எழுப்பியுள்ளது.

ரீடைல் கடைகள்

ரீடைல் கடைகள்

கமிஷனுக்காகவும், சிறிய அளவிலான வாடிக்கையாளர்களுக்காகவும் Zomato Pay மற்றும் Swiggy Diner ஆகிய சேவைகளை ஏற்றால் தொடர்ந்து ரீடைல் கடைகள் அனைத்தும் டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகும். இது நீண்ட கால அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இந்திய தேசிய உணவக சங்கம் (NRAI)கருத்து.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Hotel industry cautions restaurants to choose Zomato Pay, Swiggy Diner over other payment options

Hotel industry cautions restaurants to choose Zomato Pay, Swiggy Diner over other payment options சோமேட்டோ, ஸ்விக்கி-க்கு கடும் எதிர்ப்பு.. ஹோட்டல் உரிமையாளர்கள் வைத்த செக்..!

Story first published: Wednesday, September 7, 2022, 11:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.