திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முனைவர் பட்டம் பெற்ற மணமகனுக்கும், தென் கொரியா நாட்டை சேர்ந்த மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், இரு விட்டு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், இவர் கோயம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.
பின்னர் மேற்படிப்புக்காக தென் கொரியா நாட்டுக்கு சென்றார். அங்கே அவர் முனைவர் பட்டம் பெற்று தற்போது கொரியாவிலேயே செயல்பட்டு வரும் ஒரு தனியார் தொழிற்சாலையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
தென் கொரிய பெண்
இவர் கடந்த மூன்று வருடங்களாக தென் கொரியா நாட்டில் உள்ள பூசான் மாகாணத்தை சேர்ந்த சேங்வான்முன் என்ற இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து பெற்றோர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
காதல்
இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, தென் கொரியாவை சேர்ந்த சேங்வான் முன் குடும்பத்தினர் கடந்த வாரம் இந்தியா வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகள் முடிந்து இன்று திட்டமிட்டபடி திருமணம் நடைபெற்றது.
இந்து முறைப்படி திருமணம்
தென் கொரியாவை சேர்ந்த இளம் பெண் சேங்வான் முன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கும், உறவினர்கள் இந்து முறைப்படி திருமணம் நடத்தி வைத்தனர். வேத மந்திரங்கள் முழங்க, இருவரும் மாலைமாற்றிக் கொண்டு, பின்னர் பிரவீன் பெற்றோர் உறவினர்கள் அட்சதை தூவ சேங்வான் முன் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினார்.
மிக்க மகிழ்ச்சி
தொடர்ந்து பிரவீன் சகோதரிகள் சேங்மான் முன்னுக்கு ப் மெட்டி அணிவிக்க அவரது சகோதரிகள் பிரவீனுக்கு மெட்டி அணிவித்தனர் தொடர்ந்து பிரவீன் உறவினர்கள் நண்பர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் இது குறித்து பேசிய மணமகளின் உறவினர்கள் தமிழ் கலாச்சாரம் எப்போதுமே தங்களுக்கு பிடித்தமானது என்றும் தங்களது மகள் திருமணம் தமிழ் முறைப்படி நடைபெறுவது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.