சீனாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பொழுதுபோக்கு சேவை நிறுவனமான பைட் டான்ஸ், ஹாங்காங்கில் உள்ள அதன் வீடியோ கேமிங் பிரிவில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
சீன அரசின் கடுமையான விதிமுறைகள் காரணமாக அந்நாட்டின் இண்டர்நெட் மற்றும் கேமிங் துறை நிறுவனங்கள் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு பல மாதங்களாகத் தவித்து வருகிறது. இந்த நிலையில் பண பலம் கொண்ட நிறுவனமாகப் பைட் டான்ஸ் விளங்கினாலும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் பல முன்னணி டெக் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
80 – 90களில் கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
டிக்டாக்
உலகம் முழுவதும் பிரபலமான ஷாட் வீடியோ செயலியான TikTok இன் உரிமையாளரான ByteDance, அதன் வீடியோ கேமிங் யூனிட்டை பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்துள்ளது. இப்பிரிவில் தற்போது நூற்றுக்கணக்கான ஊழியர்களை ByteDance பணிநீக்கம் செய்துள்ளதாக South China Morning Post தெரிவித்துள்ளது.
கேமிங் ஸ்டுடியோ
பெய்ஜிங்க்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பைட் டான்ஸ் நிறுவனம், அதன் கேமிங் ஆப்ரேஷன்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் பல மில்லியன் டாலர்களை முதலீடாகக் குவித்தது. ஜூன் மாதத்தில் 101 ஸ்டுடியோ மூடப்பட்ட பிறகு, ஷாங்காய்-யில் இருக்கும் வுஷுவாங் ஸ்டுடியோவை ஊழியர்கள் பணிநீக்கத்தால் முழுமையாக மூடியுள்ளது.
பணிநீக்கம்
ByteDance ஹாங்சோ மாவட்டத்தில் உள்ள அதன் கேம் டெவலப்மென்ட் ஸ்டுடியோவான ஜியாங்னன் ஸ்டுடியோவிலும் பணிநீக்கம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூன் மாதத்தில் பைட் டான்ஸ் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஒரு கேம் டெவலப்மெண்ட் ஸ்டுடியோவை மூடியது.
டென்சென்ட்
கடந்த மாதம், சீனாவின் மிகப்பெரிய வீடியோ கேமிங் மற்றும் சமூக ஊடக நிறுவனமான டென்சென்ட் பொருளாதாரம் மந்தமான நிலையில் இரண்டாவது காலாண்டில் 5,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தை
டிக்டாக் உலகெங்கிலும் உள்ள ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது மட்டும் அல்லாமல் அதன் மொத்த வர்த்தகம் மற்றும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது. ஐரோப்பிய வர்த்தகத்திலும் சில பணிநீக்கம் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சீன பொருளாதாரம்
சீன நிறுவனங்கள் பொதுவாகவே அதிகப்படியான பணப் பலத்தில் இருக்கும் ஆனால் தற்போது சீன பொருளாதாரம் மந்த நிலைக்குச் சென்று வரும் காரணத்தால், செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பைட்டான்ஸ், டென்சென்ட் போன்ற நிறுவனங்களும் பணிநீக்கத்தில் ஈடுபட்டு உள்ளதாகத் தெரிகிறது.
ByteDance layoff employees from video gaming unit; after tencent layoff 5000 employees
ByteDance layoff employees from video gaming unit; after tencent layoff 5000 employees டிக்டாக் நிறுவனத்தின் அதிரடி பணிநீக்கம்.. அதிர்ச்சியில் சீன ஊழியர்கள்..!