டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை துவக்க, தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் வழங்குகியுள்ளது.
டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையின், இந்திய மொழிகள் மையத்தில், தமிழ், ஹிந்தி, உருது பிரிவு, ஹிந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னடம், ஒடியா, வங்க மொழி இருக்கைகள் உள்ளன. தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என, மூன்று வகையாக விரிவுபடுத்தி, பல்கலையில் உள்ள தமிழ் பிரிவு, இனி ‘தமிழ் இலக்கியவில்’ என தனித்துறையாக செயல்பட உள்ளது.
இதற்காக, தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதையடுத்து, பல்கலை துணைவேந்தர் சாந்தி ஸ்ரீ பண்டிட், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனித்துறையாக உருவெடுக்கும், தமிழ் இலக்கிய துறை வழியாக, முதுகலை தமிழ் இலக்கிய படிப்பு, வல்லுனர் வழி மொழியாக்கம், முனைவர் பட்ட ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி, தமிழ் ஆசிரியர்களுக்கு ஆய்வு பயிலரங்கள் போன்றவை, பல்கலையுடன் இணைந்து நடத்தப்படும். தரமான நுால்கள், ‘ஜே.என்.யூ தமிழியல்’ என்ற பெயரில், 100 பக்க அளவில் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு இதழ் வெளியிடப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement