சென்னை: பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியாகும் நேரம் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் வந்துட்டாரு
பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குநர் மணிரத்னம் தனது மனைவி சுஹாசினியுடன் நேரு ஸ்டேடியத்திற்குள் வருகை தந்துள்ளார். இருவரும் மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மேடையின் பிரம்மாண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறது.
![மிஷ்கின் பங்கேற்பு](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/screenshot50234-1662472342.jpg)
மிஷ்கின் பங்கேற்பு
இயக்குநர் மிஷ்கின் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தையும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளது. அந்த புகைப்படத்தையும் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், விக்ரம் பிரபு, துருவ், பிரபு, ஏஆர் ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், அதிதி ராவ், சித்தார்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
![டிரைலர் ரிலீஸ் எப்போ](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/screenshot50235-1662472420.jpg)
டிரைலர் ரிலீஸ் எப்போ
பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் டிரைலர் யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களில் சரியாக இரவு 9 மணிக்கு வெளியாகும் என்கிற அறிவிப்பையும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
![டீசரை விட தெறிக்குமா](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/vikram1-1660737844.jpg)
டீசரை விட தெறிக்குமா
பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கொஞ்சம் ஏற்றியது என்றால் அது பொன்னியின் செல்வன் டீசர் தான். ஒவ்வொரு ஃபிரேமும் ரசிகர்களை ஈர்க்க வைத்தது. சிஜி இன்னும் பெட்டராக பண்ணியிருக்கலாம் என்கிற குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில், டீசரை விட டிரைலர் மிரட்டுமா ஐமேக்ஸ் திரையில் வெளியிட உள்ள நிலையில், சிஜி, டிஐ எல்லாம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.