தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் கடந்த அமர்வின் முடிவில் சரிவில் முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்திலும் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது.
இதற்கிடையில் இன்று கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. வாங்க சரியான வாய்ப்பா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
மீண்டும் 1 மாத சரிவில் தங்கம்
தங்கம் விலையானது கடந்த அமர்வில் 1712 டாலர் என்ற லெவலில் முடிவடைந்த நிலையில், இன்று கீழாக தொடங்கியுள்ள நிலையில் மேற்கொண்டு சரிவிலேயே காணப்படுகின்றது. இது தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கியும் கட்டாயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் Vs தங்கம்
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது, மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ள நிலையில், இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது வரவிருக்கும் அமர்வுகளிலும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா மத்திய வங்கி?
மேற்கத்திய நாடுகளின் தடையால், ஐரோப்பா படிப்படியாக ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை குறைத்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவுக்கு செல்லும் கேஸ் பைப்லைனில் நிறுத்த போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையால் பிரச்சனையை எதிர்கொண்டுள்ள ஐரோப்பாவுக்கு, இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என்ற நிலையில், ECB மத்திய வங்கியானது 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கி
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் செப்டம்பர் 20 – 21ல் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வட்டி விகித அதிகரிப்பு கட்டாயம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு மீண்டும் வலுவடைய தொடங்கியுள்ளது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
முதலீடுகள் சரிவு
தொடர்ந்து அதிகரித்து வரும் டாலர் மதிப்பு, பத்திர சந்தைக்கு மத்தியில் இடிஎஃப் முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் மேற்கண்ட பல்வேறு காரணிகளும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்குஅழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 5 டாலர்கள் குறைந்து, 1707.80 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 0.63% குறைந்து, 17.797டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது தொடக்கத்தில் 10 கிராமுக்கு 201 ரூபாய் குறைந்து, 50,080 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கேப் டவுன் ஆகி கீழாக தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 246 ரூபாய் குறைந்து, 52,900 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும் கேப் டவுன் ஆகி தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து, 4695 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து, 37,560 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 5122 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 40,976 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 600 ரூபாய் குறைந்து , 51,220 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 58 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 580 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து 58,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.46,950
மும்பை – ரூ.46,450
டெல்லி – ரூ.46,550
பெங்களூர் – ரூ.46,450
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,950
gold price on 7th September 2022: gold prices again nearly in 1 month low
gold price on 7th September 2022: gold prices again nearly in 1 month low/ தங்கம் விலை மீண்டும் சரிவு.. கிட்டதட்ட 1 மாத சரிவில்.. இது வாங்க சரியான வாய்ப்பா?