வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி (54), மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த விபத்து நிகழ, சம்பவம் நடந்தப் பகுதியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலத்தின் மிக மோசமான வடிவமைப்பே காரணம் என்று தடயவியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
சைரஸ் மிஸ்திரி:
‘டாடா சன்ஸ்’ தலைவராக இருந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி, 54, மஹாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த 2012ல் அதன் தலைவராக இருந்த ரத்தன் டாடா, 75 வயதைக் கடந்ததால் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்றார்.
டாடா சன்ஸ் குழுமத்தின், 142 ஆண்டு வரலாற்றில், டாடா குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டது அது இரண்டாவது முறை. ஆனால் நான்கு ஆண்டுக்குள் அவர் அந்தப் பதவியில் இருந்து விலக நேரிட்டது.
விபத்து:
இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு, தன் ‘மெர்சிடஸ்’ காரில் பயணித்தார் சைரஸ் மிஸ்திரி. மும்பைக்கு அருகே, பால்கர் மாவட்டத்தில், சூர்யா நதியின் மீதுள்ள பாலத்தில் சென்றபோது, சாலைத்தடுப்பில் மோதி அந்தக் கார் விபத்துக்குள்ளானது.
இதில், சைரஸ் மிஸ்திரி மற்றும் அவருடன் பயணித்த ஜஹாங்கிர் பன்டோல் உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற அனய்தா பண்டோல் மற்றும் உடன் பயணித்த டார்யஸ் பண்டோல் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தடயவியல் குழுவினர்:
இது குறித்து 7 பேர் கொண்ட குழு சைரஸ் மிஸ்திரி வந்த கார் விபத்துக்குள்ளான இடத்தை , 7 பேர் கொண்ட குழு கொண்ட தடயவியல் துறையினர் சோதனை மேற்க்கொண்டு வந்தனர்.
மோசமான வடிவமைப்பு காரணம்:
இது குறித்து, தடயவியல் துறையினர் இன்று(செப்.,07) கூறியதாவது: மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யுவி காரில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றும், சம்பவம் நடந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் மிக மோசமான வடிவமைப்பே விபத்துக்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
காரில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் மிகச் சரியாக வேலை செய்திருப்பதாகவும், தடயவியல் துறையினர் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement