தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ: இன்றே கடைசி.. வாங்கலாமா? வேண்டாமா?

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை இரண்டாம் நாள் ஐபிஓவில் காலையிலேயே முழுமையாக முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர்.

இரண்டாம் நாள் முடிவில் தகுதியான முதலீட்டு நிறுவனங்கள் 0.98 மடங்கும், நிறுவன முதலீட்டாளர்கள் 1.27 மடங்கும், ரீடெயில் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 3.61 மடங்கும் என மொத்தமாக 1.53 மடங்காகத் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை வாங்கியுள்ளனர்.

இன்று கடைசி நாள் என்பதால் மேலும் அதிகமாக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்க்கண்டைல் ​​வங்கி ஐபிஓ.. முதல் நாளிலேயே 1.83 மடங்கு பங்குகளை வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்!

 இரண்டு நாட்கள் முடிவு

இரண்டு நாட்கள் முடிவு

87,12,000 பங்குகளை ஐபிஓ மூலம் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வெளியிட்டு இருந்தது. அதில் 88,32,292 பங்குகளை செவ்வயாகிழமை காலையிலேயே முதலீட்டாளர்கள் வாங்கிவிட்டனர்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி

மார்ச் 2022 கணக்கின் படி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு 509 கிளைகள் உள்ளன. 106 கிளைகள் கிராமப்புறங்களில் உள்ளன. 80 கிளைகள் புறநகர்ப் பகுதிகளில் உள்ளன. 76 கிளைகள் மெட்ரோ நகரங்களில் உள்ளன. 5.08 மில்லியன்களுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்கள். 80 சதவீதத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் 5 வருடங்களுக்கும் மேலாக வங்கியில் கணக்கை வைத்துள்ளார்கள்.

ஐபிஓ தேதி
 

ஐபிஓ தேதி

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி ஐபிஓ பங்குகளைச் செப்டம்பர் 5-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை வாங்கலாம். நீண்ட நாட்களுக்குப் பின்பு வங்கி நிறுவனம் ஒன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.

என்ன விலை?

என்ன விலை?

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி பங்குகளை 500 ரூபாய் முதல் 525 ரூபாய் வரை கொடுத்து ஐபிஓவில் வாங்கலாம். இது முற்றிலும் புதிய பங்கு வெளியீடு – அதாவது முதலீடு முழுமையாக நிறுவனத்திற்குச் செல்லும். எனவே இதில் முதலீட்டாளர்கள் அதிகம் விருப்பம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு பங்குகள் வாங்க வேண்டும்?

எவ்வளவு பங்குகள் வாங்க வேண்டும்?

ஐபிஓவில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி பங்குகளைக் குறைந்தது 28 பங்குகள் ஒரு லாட் என வாங்க வேண்டும். அதற்கு குறைந்தது 14000 ரூபாய் முதல் 14700 ரூபாய் வரை தேவைப்படும். ரீடெயில் முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் (1,91,100 ரூபாய்) வரை வாங்கலாம்.

எப்போது என்எஸ்ஈ, பிஎஸ்ஈ-ல் பட்டியலிடப்படும்?

எப்போது என்எஸ்ஈ, பிஎஸ்ஈ-ல் பட்டியலிடப்படும்?

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி பங்குகள் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் பட்டியலிடப்படும். செப்டம்பர் 12-ம் தேதி பங்குகள் அலாட் செய்யப்படும். செப்டம்பர் 14-ம் தேதி டீமாட் கணக்கில் வரவு வைக்கப்படும்.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

நிறுவன முதலீட்டாளர்கள் 75 சதவீத பங்குகளை வாங்கலாம். நிறுவனம் அல்லாத முதலீடாலர்கள் 15 சதவீத பங்குகளை வாங்கலாம். ரீடெயில் முதலீட்டாளர்கள் 10 சதவீத பங்குகளை வாங்கலாம். மொத்தமாக 15,840,000 பங்குகளை விற்பனை செய்யப்படுகிறது.

 6 வெளிநாட்டு முக்கிய முதலீட்டாளர்கள்

6 வெளிநாட்டு முக்கிய முதலீட்டாளர்கள்

ராபர்ட் & ஆர்டிஸ் ஜேம்ஸ் கம்பெனி (4.95 சதவீதம்), ஸ்டார்ஷிப் ஈக்விட்டி ஹோல்டிங்ஸ் (4.72 சதவீதம்), சப்காண்டினென்டல் ஈக்விட்டிஸ் (4.64 சதவீதம்), ஈஸ்ட் ரிவர் ஹோல்டிங்ஸ் (3.72 சதவீதம்), சுவிஸ் ரீ இன்வெஸ்டர்ஸ் மொரிஷியஸ் (1.90 சதவீதம்) மற்றும் எஃப்ஐ இன்வெஸ்ட் மொரிஷியஸ் (1.48 சதவீதம்) – ஐபிஓவுக்குப் பிறகு அடுத்த ஆறு மாதங்களுக்கு தங்கள் பங்குகளை வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் வாங்கலாம்?

நீங்கள் வாங்கலாம்?

வலுவான மரபு, விசுவாசமான வாடிக்கையாளர் தளம், தமிழ்நாட்டில் வலுவான இருப்பு மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் வங்கி சேவை நிறுவனம் என்பதால் இந்த பங்குகளை வாங்கலாம் என Ajcon Global பரிந்துரைத்துள்ளது.

குறிப்பு

குறிப்பு

இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் நிபுணர்களின் பார்வைகள் மற்றும் முதலீட்டு உதவிக்குறிப்புகள் அவர்களின் சொந்த கருத்துகள் ஆகும். எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், பயனர்கள் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் இழப்புகளுக்குத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் பொறுப்பல்ல.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamilnadu Mercantile Bank IPO 1.53 Times Over Subscribed in Second Day

Tamilnadu Mercantile Bank IPO 1.53 Times Over Subscribed in Second Day |தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ பங்குகளை வாங்கி குவித்த ரீடெயில் முதலீட்டாளர்கள்.. இன்றே கடைசி.. வாங்கலாமா? வேண்டாமா?

Story first published: Wednesday, September 7, 2022, 9:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.