திமுகவுடனான உறவை ஓபிஎஸ் பகிரங்கப்படுத்திவிட்டார்: இபிஎஸ் குற்றச்சாட்டு

திருச்சி: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்டு அங்கு பொதுகூட்டத்தில் பேசிவிட்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளா்களை சந்தித்து பேசினார். பொதுக்குழுவை நடத்தியது தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்ட குழு நீதியரசரிடம் சென்று இருக்கிறார்கள் நாங்களும் அபிடவிட் தாக்கல் செய்துள்ளோம் என்றார். 

ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அதிகப்படியான பொதுக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர் சுட்டிக்காட்டினார். தமிழக முதல்வர் நேற்று துவங்கி வைத்த புதுமைப் பெண் திட்டத்திற்கு ஓ.பி.எஸ்சின் மகன் ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்திருக்கிறாரே? என்ற விவகாரம் தொடர்பாக பதிலளித்த இபிஎஸ், ஓ.பி.எஸ் திமுகவில் தொடர்பு இருக்கு என்பதை அவர் வெளிப்படையாக காட்டிவிட்டார். திமுகவுடனான நெருக்கத்தை சரிப்படுத்தியுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவா் திமுகவில் எப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதோ அதேபோல்தான் கூட்டுறவு தேர்தலும் நடைபெறும். நியாயமாக தேர்தல் நடைபெறாது, இருந்தாலும் நாங்கள் ஜனநாயக முறைப்படி நடத்த முயற்சி செய்வோம் என்று இபிஎஸ் தெரிவித்தார்.

இலவச திட்டங்களால் எந்த பயனும் இல்லை இதனால் நாடு வளராது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. அது அவரது கட்சியின் நிலைப்பாடு. ஒரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது அதிமுகவிற்கு என ஒரு கொள்கை இருக்கிறது என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ராமர் கோவில் கட்டுவதற்கு அதிகமான நிதி தமிழகம் தான் கொடுத்திருக்கிறது எனவே இது ஆன்மீக பூமி தான் என அண்ணாமலை கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, அது அவர்களது சொந்த விருப்பம். என்னைப் பொறுத்தவரை ஆன்மிகம் தான் என்று அவர் தெரிவித்தார்.

நீங்க சொல்லுங்க… இந்தியா ஒரு ஜனநாயக நாடு அவரவர்களுக்கு அவரது மதம் புனிதமானது. அந்தந்த தெய்வம் அவர்களுக்கு புனிதமானது. என்னைப் பொறுத்தவரை எல்லா சாமியும் கும்பிடுவேன். ஆன்மீகம் என்பது எல்லா மதத்திற்கும் பொருந்தும் என்று இபிஎஸ் தெரிவித்தார்.

அதிகமாக போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது. இந்த அரசு அதை கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஆன்லைன் ரம்மியும் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் ஆனால் அதற்கு மக்களிடம் கருத்து கேட்கிறது இந்த அரசு. சாலைகள் பாலங்கள் எல்லாம் நாங்கள் கொண்டு வந்த திட்டம் தான். கொள்ளிடம் அணை நாங்கள் போட்ட திட்டம் தான் இதற்கும் “ரிப்பன் கட் பன்னி” தற்போதைய முதல்வர் திறந்து வைப்பார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.