தென் மாவட்டங்களை சுற்றி வரும் முதல்வர் ஸ்டாலின்: பயணத் திட்டம் என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணத்தை கன்னியாகுமரியில் இன்று (செப்டம்பட் 7) மாலை முதல்வர்

தொடங்கிவைக்கிறார்.

பாரத் ஜூடோ யாத்திரை (Bharat Jodo Yatra) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இன்று தொடங்கும் பாத யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக ஜம்மு காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. சுமார் 3,500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் கடக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்வர் தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி செல்கிறார். விழா முடிந்த பின்னர் பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி சென்று, அங்கு இன்று இரவு தங்குகிறார்.

நாளை காலை (செப்டம்பர் 8) திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதன் பின்னர், அங்கிருந்து விருதுநகர் சென்று, திமுக முப்பெரும் விழா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்குச் செல்கிறார்.

மதுரையில் நாளை இரவு தங்கும் முதல்வர் ஸ்டாலின் செம்படம்பர் 9ஆம் தேதி காலை, அமைச்சர் பி.மூர்த்தி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

பின்னர் மதுரை தமுக்கம் மைதானத்தில் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, அருகில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்தைப் பார்வையிடுகிறார். அன்று இரவு மதுரையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.