பாரத் ஜோடோ யாத்ரா: இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி… ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை, இன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து தொடங்குகிறார். அதை முன்னிட்டு, இன்று காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்றார். நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்த ராகுல் அங்கு மரக்கன்று ஒன்றையும் வைத்தார்.

இந்த யாத்திரை 150 நாள்களில் 3,500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைப்பயணத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை அசைத்து ராகுல் காந்தியிடம் கொடியை வழங்கி யாத்திரையைத் தொடங்கி வைக்கிறார்.

ராகுல் காந்தி

அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். நாளை இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தங்குகிறார். பின்னர் 8-ம் தேதி காலை நடைபயணத்தைத் தொடர்கிறார் ராகுல் காந்தி. 8-ம் தேதி இரவு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தங்குகிறார். 9-ம் தேதி கன்னியாகுமரி – கேரள எல்லை வரை நடைபயணம் மேற்கொண்டு இரவு செறுவாரக்கோணம் பகுதியில் தங்குகிறார். 10-ம் தேதி காலை அவர் கேரளா மாநிலத்தில் நடைபயணத்தை தொடங்குகிறார்.

ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்ரா மொத்தம் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து செல்லும்படியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ராகுலுடன் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் ஆறு முதல் ஏழு மணி நேரம் நடந்து செல்வதாகவும், அனைத்து மாநிலத் தலைவர்களும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர்களும் அந்தந்த மாநிலங்களில் ‘பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியிருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.