NEET Exam 2022 results how to check online? : தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG, 2022 க்கான முடிவு வெளியீட்டு தேதி மற்றும் நேரத்தை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. NTA அட்டவணையின்படி, நீட் தேர்வு 2022க்கான மதிப்பெண் அட்டைகள் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 அன்று நடைபெற்றது. மொத்தம் 18.72 லட்சம் விண்ணப்பதாரர்கள் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்தனர். நீட் நுழைவுத் தேர்வு இந்தியாவில் 497 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் 3,570 மையங்களில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: தமிழக பள்ளி பாடப் புத்தகத்தில் சாவர்க்கர் குறித்து பதிவு; புதிய சர்ச்சை
இதனிடையே நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை செப்டம்பர் 7 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மூலமாக தங்கள் முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.
நீட் ரிசல்ட் செக் செய்வது எப்படி?
முதலில் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://neet.nta.nic.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கு நீட் யூஜி 2022 முடிவுகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் பயனர் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு உள் நுழைய வேண்டும்.
இப்போது உங்கள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் திரையில் காண்பிக்கப்படும்.
இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முன்னதாக, NTA, ஆகஸ்ட் 31 அன்று, அனைத்து குறியீடுகளுக்கான நீட் அதிகாரப்பூர்வ பதில் குறிப்புகளை வெளியிட்டது. குறிப்புகளில் கொடுக்கப்பட்ட எந்தவொரு பதிலுக்கும் எதிராக சவால்களை எழுப்ப தேர்வர்களுக்கு செப்டம்பர் 2 வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்காலிக விடைக்குறிப்புடன், விண்ணப்பதாரர்களின் நீட் OMR பதில் தாள்களையும் NTA வெளியிட்டது. நீட் விடைத்தாள் மற்றும் OMR விடைத்தாள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் தங்களின் தோராயமான மதிப்பெண்களைக் கணக்கிடலாம்
இந்த ஆண்டு முதல், டை-பிரேக்கிங் முறைக்கு வயது நீக்கப்பட்டது. அதாவது, இரண்டு மாணவர்களிடையே டை ஏற்பட்டால், உயிரியலில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் NTA அதைத் தீர்க்கும். இது தொடர்ந்தால், வேதியியலில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவருக்கு முன்னுரிமையும், அதைத் தொடர்ந்து குறைவான தவறான பதில்கள் அளித்த விண்ணப்பதாரர் முன்னுரிமை பெறுவார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil