சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங்கை மணிரத்னம் பல்வேறு இடங்களில் வெறும் 150 நாட்களில் எடுத்து முடித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பொன்னியின் செல்வன் படம்
மணிரத்னம் தான் இதுவரை இயக்கிய படங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் தற்போது தன்னுடைய கனவு ப்ராஜெக்டாக பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
பிரம்மாண்ட இசை வெளியீடு
முன்னதாக படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் பிரம்மாண்டமான அளவில் வெளியானது. தொடர்ந்து நேற்றைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட்டது. ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தின் 6 பாடல்களும் ட்ரெயிலரும் வெளியானது.
5 மொழிகளில் ட்ரெயிலர்
படத்தின் ட்ரெயிலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட, தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் பிரபல நடிகர்கள் வெளியிட்டனர். படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள சூழலில், சர்வதேச அளவில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.
சிறப்பு விருந்தினர்கள்
இந்நிலையில் நேற்றைய இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி மற்றும் கமல் பங்கேற்றனர். மேடையில் பேசிய ரஜினி, மிகவும் உற்சாகமா பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். கல்கியின் பொன்னியின் செல்வன் வாரந்தோறும் வாரயிதழ் ஒன்றில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வெளியானது குறித்தும் அவர் பகிர்ந்தார்.
ரசிகர்களை கட்டிப்போட்ட கல்கி
அப்போது புதுப்பட ரிலீசுக்காக காத்திருப்பதை போல காத்திருந்து ரசிகர்கள் தங்களுடைய பிரதியை வாங்குவார்கள் என்றும் திருவிழாக் கூட்டம் ஆர்ப்பரிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய அழகான உணர்ச்சிப்பூர்வமான நடையால் கல்கி ரசிகர்களை கட்டிப் போட்டதையும் சுட்டிக் காட்டினார்.
பிரம்மாண்ட இசை வெளியீடு
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் மும்பையிலிருந்து ஏஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, பார்த்திபன் உள்ளிட்டவர்களும் மிகவும் சிறப்பான வகையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தனர்.