வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: போலியாக நன்கொடை மற்றும் வரி மோசடி தொடர்பாக அரசியல் கட்சிகளை குறிவைத்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நடக்கும் சோதனை நடந்த நிலையில், அரசியல் கட்சிகள், உரிய விதிகளை பின்பற்றாமல், நன்கொடையை பெற்றுக்கொண்டு வரி மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. சட்ட விதிகளை பின்பற்றாமல் வருமான வரி விலக்கு கோரிய அரசியல் கட்சிகள் மீது கடந்த மே மாதம் நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், போலியாக நன்கொடை பெற்றது, வரி மோசடியில் ஈடுபட்டது மற்றும் விதிகளை மீறியதற்காக 87 கட்சிகளை தனது பட்டியலில் இருந்து நீக்கியது.
டில்லி, உ.பி., குஜராத், கூர்கான் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. லக்னோவில், ராஷ்ட்ரிய கிராந்திகாரி சமாஜ்வாதி கட்சியின் கோபால் ராய் வீடும் சோதனைக்கு உள்ளானது. கோபால் ராய் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்தி வந்தது தெரியவந்துள்ளதாகவும், அதன் மூலம் நடந்த வரி ஏய்ப்பு குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement