பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் காலை தொட்டு வணங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.
விழாவில் பங்கேற்ற ரசிகர்களின் ஏராளமான மொபைல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின.
பொன்னியன் செல்வனின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட ஏராளமான திரைபி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மணிரத்னம் இயக்கத்தில் இம்மாதம் 30-ஆம் திகதி திரைக்கு வரவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பழுவூர் ராணி ‘நந்தினி’ கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், நேற்று நடந்த இந்த விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் ரஜினிகாந்தை சந்தித்தபோது, முதலில் ஐஸ்வர்யா ராய் ரஜினியின் காலைத் தொட்டு வணங்கினர், பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Another video of our #Thalaivar #Rajinikanth entry at #PonniyinSelvan audio launch.
Superstar and #AishwaryaRaiBachchan madam greet each other!!pic.twitter.com/0BBPg9bZxl
— KK (@KaneshBruno) September 6, 2022
ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இதற்கு முன்பு தமிழில் சங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் இந்தியிலும் ரோபோ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. 2010-ல் வெளியான இப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், எந்திரன் 2010ல் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக உருவெடுத்தது.
நடிகை ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஐஸ்வர்யா ராயோ அல்லது படத்தின் தயாரிப்பாளர்களோ இதனை உறுதிப்படுத்தவில்லை.
மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி,த்ரிஷா, கார்த்தி, ஜெய்ராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
It happened guys. Aishwarya Rai touched Rajinikanth’s feet 😍#AishwaryaRaiBachchan #Rajinikanth#PonniyinSelvanpic.twitter.com/FMjj9SIYFJ https://t.co/220rrV1wMj
— Aishwarya as Nandini(PonniyinSelvan)’ll b Historic (@badass_aishfan) September 6, 2022