வெறும் 1000 டாலர்.. SpaceX-க்கு போட்டியாக ISRO..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வடிவமைத்து, உருவாக்க விரும்புவதாகப் பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 2022 இன் போது ISRO தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி பயணத் துறையைத் தலைகீழாக மாற்றி வரும் தனியார் நிறுவனமான SpaceX தான் முதன் முதலில் ஒரு முறை பயன்படுத்திய ராக்கெட்-ஐ 2வது முறையும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பெரும் புரட்சியை உண்டாக்கிய எலான் மஸ்க் தற்போது மார்ஸ்-க்குப் பட்ஜெட் விலையில் பயணம் செய்யும் திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ISRO நிறுவனம் SpaceX போலவே திரும்பவும் பயன்படுத்தும் ராக்கெட்-ஐ உருவாக்க முடிவு செய்துள்ளது, இதன் மூலம் இந்தியாவிலும் பெரும் புரட்சி உருவாக்கப்பட உள்ளது.

அதென்ன 50/30/20 பட்ஜெட் விதி.. உங்க செலவு, சேமிப்பு எப்படி இருக்கணும்?

இஸ்ரோ

இஸ்ரோ

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளி பயணத்தில் மறுபயன்பாட்டு ராக்கெட் என்பது செலவுகளைப் பெரிய அளவில் குறைப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் செலவைக் குறைத்து உலகளாவிய சந்தையைக் குறிவைத்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான பயணம்

மலிவான பயணம்

விண்வெளி கண்காட்சியின் போது இஸ்ரோவின் தலைவர் எஸ் சோமநாத் கூறுகையில், “இன்று நாம் செய்வதை விட விண்ணில் செயற்கைக்கோள்களை மிகவும் மலிவான விலையில் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.

1000 டாலர்
 

1000 டாலர்

தற்போது ஒரு கிலோ பேலோடு அதாவது ஓரு கிலோ எடை கொண்ட செயற்கைகோள் அல்லது பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ 10000 டாலர் முதல் 15000 டாலர் வரையில் செலவு செய்கிறது. இதை மறுபயன்பாட்டு ராக்கெட் மூலம் வரும் காலத்தில் 5000 டாலர் அல்லது 1000 டாலராகக் குறைக்கும் முயற்சிக்க முடியும் என இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.

மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம்

மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம்

இந்தியாவிடம் தற்போது மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம் இல்லை, தற்போது செலுத்தப்படும் ராக்கெட் அனைத்தும் விண்ணில் செலுத்தும் போதே முழுமையாக எரிந்துவிடுகிறது, இதைத் திரும்பவும் கொண்டு வரும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

GSLV Mk-III அடுத்தது

GSLV Mk-III அடுத்தது

இஸ்ரோ GSLV Mk-III-க்கு அடுத்தபடியாக தயாரிக்கும் ராக்கெட் மறுபயன்பாட்டு ராக்கெட் ஆக இருக்கும். இதற்காக இஸ்ரோ சமீபத்தில் Inflatable Aerodynamic Decelerator (IAD) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சோதனை செய்து வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

ISRO will cut cost from 15000 USD to $1,000 for 1 kg payload with own reusable rocket tech

ISRO will cut cost from 15000 USD to $1,000 for 1 kg payload with own reusable rocket tech வெறும் 1000 டாலரில் விண்வெளியில் செயற்கைகோள் பயணம்.. SpaceX-க்குப் போட்டியாக ISRO..!

Story first published: Wednesday, September 7, 2022, 13:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.