ஏ.டி.எம் மையங்களில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் குறித்து அன்றாடம் கேள்விப் பட்டிருப்போம்.
திருட்டு, கொள்ளைகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும் போலீஸ் வசம் சிக்காமல் இருக்க பல்வேறு வழிகளை கையாள்வார்கள். அந்த வகையில் மகாராஷ்டிராவில் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்று அம்பலமாகியிருக்கிறது. அதன்படி, சதாரா மாவட்டத்தின் நாக்தானே கிராமத்தில் உள்ள ஏ.டி.எமில் உள்ள பணத்தை கொள்ளை அடிப்பதற்காக வெடிகுண்டு வைத்து தகர்த்திருக்கிறார்கள் கொள்ளையர்கள்.
கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன்பு ஏ.டி.எம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமிரா மூலம் போலீசிடம் சிக்கிவிடக் கூடாதென சிசிடிவி மீது கருப்பு பெயிண்ட் கொண்ட ஸ்பிரேவை அடித்திருக்கிறார்கள்.
அதற்கு முன்பு வரை பதிவான காட்சிகளை வைத்து ஆராய்ந்ததில் புதன்கிழமை (செப்.,7) நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்திருக்கிறது.
அதன்படி, ஏ.டி.எம். மெஷினில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க ஜெலட்டின் வெடிகுண்டை போட்டு மெஷினை தகர்த்திருக்கிறது கொள்ளை கும்பல். கொள்ளையின் போது 11 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சதாரா மாவட்ட காவல்துறை கொள்ளையர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM