திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கே.எம்.எஸ். சிவக்குமார் இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிரேன் மூலம் மாலை அணிவித்து சாலைகளில் பெண்கள் வரிசையாக நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், திமுகவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். திமுக ஒரு குடும்பக் கட்சி. அது கார்ப்பரேட் மாடல். எந்த பதவியுமே இல்லாத உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
அவரிடம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மேயருக்கு மூன்றாவது வரிசையிலும் துணை பெயருக்கு இரண்டாவது வரிசையிலும் இருக்கை அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், அதுதான் திராவிட மாடல் ஆட்சி எனவும், திமுக ஆட்சியில் யாருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுவதில்லை எனவும் விமர்சித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திரா அரசு கொசஸ்த்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை கண்டிப்பதாகவும், அதனை தடுக்க தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
டிடிவி தினகரன் சசிகலாவை கட்சி இணைத்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், அதிமுக கட்சி தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி எனவும் அதில் வேறு யாருக்கும் இடமில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள் திருடப்பட்டு 50 நாட்கள் ஆகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு தற்பொழுது ஆவணங்கள் திருடப்பட்டது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் பிரதான கட்சிக்கு இந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு எந்த விதத்தில் நீதி கிடைக்கும் என பொதுமக்கள் எண்ணி பார்க்க வேண்டும் எனவின் தெரிவித்தார்.