அமித்ஷா தலைமையில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. எதிர்க்கட்சி முகாமில் பரபரப்பான செயல்பாடுகளுக்கு மத்தியில் 2024 பொதுத் தேர்தலுக்கான திட்டத்தை பாஜக உருவாக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டில் 543 மக்களவைத் தொகுதிகளில் 303 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. முதல் முறையாக ஒரு கட்சி தனித்துப் பெரும்பான்மை பெற்றது. இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட இடங்களை எதிர்க்கட்சிகள் வென்றன. அதில் காங்கிரஸ் அதிகபட்சமாக சுமார் 53 இடங்களில் வென்றது.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவுடன் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமித் ஷாவும், இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் மூன்று முதல் நான்கு இடங்கள் மீது கவனம் செலுத்துமாறு பணிக்கப்படுள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி அமைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்த அமைச்சர்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் எதிர்வரும் 2024 தேர்தலினை மனதில் கொண்டு பல்வேறு வியூகங்கள் வகுக்கும் திட்டங்களில் அமித்ஷா தலைமையிலான இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.