தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என இரண்டு மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நடைபெற்றது. திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரே இருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார்.
அப்போது மூன்று இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிநாதனை சரமாரியாக கழுத்துப் பகுதியில் அறிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் நாற்காலியில் அமர்ந்திருந்த சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். கொலை குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், சாமிநாதனின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.