Neet Exam: 'திமுகவுக்காக நீட் தேர்வு ரத்தா? ஒருபோதும் முடியாது' அண்ணாமலை திட்டவட்டம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது:

“70 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இந்திய நாடு சீரழிந்தது கடந்த எட்டு ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் எப்படி வளர்ச்சி பெற்றது என்பதை ராகுல் காந்தி தனது பாதயாத்திரையில் தெரிந்துக்கொள்வார் என்றார்.

நீட் தேர்வு எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது. திமுகவினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்காக நீட் தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என்று அண்ணாமலை கடுமையாக சாடினார்.

பின்னர், அவரிடம் அதிமுக விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை பல காலகட்டங்களில் அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளது, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக, அதனை குறைத்து மதிப்பிட கூடாது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சமூக ஊடகங்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் அது நடுநிலையோடு நேர்மையாக செயல்பட வேண்டும். இந்திய அளவில் தமிழகத்தில் தான் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக தரவுகள் உள்ளது. முதல்வர் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது என்றார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும், தமிழ்நாட்டில் கனிம வள கொள்ளை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை மாநில அரசு கனிம வள கடத்தலை தடுக்க முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் நிர்வாகத்தை எழுதிக்கொடுத்து விடுங்கள் நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம் என சூளுரைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.