ஓப்போ இந்தியா நேற்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் கலர் ஓஎஸ்13 பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிபுணர்கள் பலரும் கலர் ஓஎஸ்13 எப்படி இருக்கிறது என்ற கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
ஓப்போ தனது கலர் ஓஎஸ்13 – ஐ உலகின் ஒரு சில முன்னணி டெக் நிபுணர்களிடம் கொடுத்து பயன்படுத்த செய்து அதன் பயன்பாட்டு அனுபவங்களை பற்றி அவர்களிடம் கருத்து கேட்டுள்ளது. அதன்படி அவர்களது கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் இந்த புதிய கலர் ஓஸ் பல புதிய அம்சங்களையும் , தனித்துவமான பயன்பாட்டு சிறப்புகளையும் கொண்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அனிமேஷன் சார்ந்த அம்சங்கள் ஒரு ஸ்மூத் அனுபவத்தை வழங்குவதாகவும் கூறுகின்றனர். இதன் டிசைன் மொழி பயனர்களுக்கு மிக நெகிழ்வான முறையில் வசதியாக வடிவமைக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் முந்தைய அப்டேட்டை விட இது இன்னும் திறன் மிகுந்ததாக இருக்கும் என்கின்றனர். அதேபோல் இதன் அப்கிரேட் செய்யப்பட்ட ஏஓடி ஆப்ஷனால் மொபைல் ஸ்லீப்பிங் மூடில் இருந்தாலும் தடையின்றி பாடல் கேட்பது போன்ற வேலைகளை செய்ய முடிகிறது என்கின்றனர்.
இதில் முக்கியமானது சில நேரங்களில் நாம் ஸ்கிரீன்ஸாட் எடுத்து விட்டு அது யாருடைய மெசேஜ் என்பது உட்பட மறைக்காமல் அப்படியே அவசரத்தில் அனுப்பிவிடுவோம். அது நம்மை பல சிக்கல்களில் மாட்டி விடும்.
ஆனால் இந்த புதிய அப்டேட்டில் நீங்கள் ஸ்கிரீன்ஸாட் எடுக்கும்போதே அதில் உள்ள ப்ரொஃபைல் பிக்ச்சர் மற்றும் பெயர் ஆகியவை ப்ளர் ஆகிவிடும். அதே போல் பெரிய ஃபைல்களை சுலபமாக மற்றோரு டிவைஸ்களுக்கு மாற்றுவதற்கான வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அட்டகாசமான லைவ் வால்பேப்பர்கள் மேலும் இந்த கலர் ஓஎஸ்ஸை தனித்து காட்டுகிறது.
மேலும் ஆண்ட்ராய்ட்13 சார்ந்த ஒப்போ கலர் ஓஎஸ்13 இன் ஸ்டேபிள் அப்டேட் செப்டம்பர் மாதம் வெளியாக போவதாக தகவல் கிடைத்துள்ளது. ஓப்போ find X5 ப்ரோ , ஓப்போ Find X5 ஆகிய மாடல்கள்தான் முதலில் கலர் ஓஎஸ் 13 அப்டேட் பெற இருக்கின்றன.