பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்பாக இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்றிரவு நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நடிகர்கள் விக்ரம், கார்த்தி, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட இத்திரைப்படத்தின் நடித்துள்ள கலைஞர்களும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை தொகுதி எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசனும் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசும்போது, “இறந்த காலம், நிகழ்காலம்,, எதிர்காலம் என மூன்று காலத்தையும் காட்டும் கருவிதான் வரலாறு. அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் போட்டியும், சதியும்தான் பொன்னியின் செல்வன் கதை. அதுதான் இன்றைய நிலையும் கூட. கல்கி செய்த மிகப்பெரிய காரியம்தான், சுயமரியாதை எனும் தமிழக அரசியல் களத்துக்கு அடித்தளம் இட்டது” என்று எம்பி சு.வெங்கடேசன் பேசினார்.
அதிகாரத்தை பிடுக்கும் போட்டியும, சதியும் பொன்னியின் செல்வன் காலந்தொட்டு இந்த காலம் வரை மாறவே இல்லை என பொருள்படும்படி மத்திய பாஜக அரசை தாக்கிதான் அவர் பேசியுள்ளார் எனவும், சினிமா விழாவில் அரசியல் பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார் என்றும் அரசியல் அரங்கில் பேச்சு எழுந்துள்ளது.