மணிரத்னம் இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் ரஜினி காந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, இயக்குநர் ஷங்கர், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் எனப் பலரும் கலந்து கொண்டனர்
விழாவில் நடிகர் ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் ஒன்றாக மேடையேறினர். அதற்கு முன்பாக, நாயகன்- தளபதி படத்தை ஒன்றிணைத்து ரஜினி – கமல் நட்பை விளக்குவது போல் காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதன் பிறகு மேடையேறிய கமல், “இந்த விழாவின் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் பாடல்கள் ஒவ்வொன்றும் என் இதயத்துடிப்பை அதிகரித்தது. இந்த மாபெரும் அரங்கில் கேட்டது கூடுதல் பிரமிப்பை கொடுத்தது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எடுக்க வேண்டுமென ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் ரைட்ஸை வாங்கி வைத்திருந்தார். அவரிடமிருந்து நான் வாங்கிக் கொண்டேன். ‘சீக்கிரம் எடுத்துவிடு என்று என்னிடம் சொன்னார் எம்.ஜி.ஆர்.பிரபுவை சாட்சியாக வைத்து இங்கு ஒன்று சொல்கிறேன்.
பொன்னியின் செல்வன் ரைட்ஸ் நான் பெற்றதும்,சிவாஜி அய்யாவிடம் பேசினேன். அப்போது அவர் , வந்த்தியதேவன் ஆ? ரஜினி ய போடு என்றார்.
நான் சற்று கோவமாகி கேட்டேன் ” அப்போ எனக்கு ? “
நீ…ஆதித்த கரிகாலன் பண்ணு என்றார் .
நான் வந்தியதேவன் ஆக பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
பலர் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க ஆசைபட்டனர்.
ஆனால் தற்போது மணி சார் மூலம் அது நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் கமல் ஹாசன்.