சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் தனித்துறை தொடங்க 5கோடி ரூபாய் நிதி வழங்கியிருக்கும் தமிழக அரசை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். முதலமைச்சரின் செந்தமிழ்ச் செயலால் அறிவுலகம் பெருமையுறுகிறது. இந்தியத் தலைநகரில் தமிழுக்குத் தனி அடையாளம் காணும் முதலமைச்சரை வாழ்த்துகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.