முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தை மதிப்பீடுகள் மற்றும் ஒரு நிறுவனத்தின் நிகர மதிப்பு பற்றி நிறையக் கேள்விகள் எப்போதும் இருக்கும்.
இதற்கு முக்கியக் காரணம் நிறுவனங்கள் என்ன தான் விரிவாக்கம், முதலீடுகள் ஆகியவற்றைச் செய்தாலும் கடைசியில் லாபம் தான் மிகவும் முக்கியக் காரணியாக ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளருக்கு உள்ளது. இதனால் நிறுவனத்தின் மதிப்பீடுகளில் கேள்வி எழுவது இயல்பு தான்.
இல்லையெனில் பங்குச்சந்தையில் அதிக மதிப்பீடு உடன் ஐபிஓ வெளியிட்ட ஸ்டார்ட்ப்அப் நிறுவனங்களின் நிலை இன்று வேற லெவவில் இருந்திருக்கும்.
கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!
லாபம்
உண்மையில் நீண்ட காலத்திற்கு, ஒரு சில நிறுவனங்களால் மட்டுமே எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப லாபத்தை வழங்க முடியும், மற்ற நிறுவனங்கள் பின்தங்கியும், முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானத்தை வழங்க முடியாமல் போகலாம். இதேபோல் சந்தையின் தேவை பொறுத்து ஒரு நிறுவனத்தின் வர்த்தகம் மாறுப்படும்.
பாதுகாப்பான முதலீடு
பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைப் பெரிய இழப்புகளிலிருந்து பாதுகாக்க மிகவும் லாபகரமான நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புவதற்கு இதுவே முதன்மைக் காரணம். கடைசியில் லாபம் தானே எல்லாம்.
25 அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்கள்
இந்நிலையில் 2021-22 நிதியாண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவின் 25 அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலை இப்போது பார்ப்போம். இந்தியாவில் அதிக லாபத்தில் இருக்கும் நிறுவனங்கள் எது என நீங்க நினைக்கிறீங்க..
முதல் இடம்
2021-22 நிதியாண்டில் 40,306 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) ரூ.39,084 கோடி நிகர லாபத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரூ.17,56,046 கோடி சந்தை மூலதனம் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்திய பங்குச் சந்தையில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகவும் உள்ளது.
டிசிஎஸ்
இதைத் தொடர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டாடா குழுமத்தின் மகுடமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உள்ளது, இதன் நிகர லாபம் 38,187 கோடி ரூபாயாக உள்ளது.
பிற நிறுவனங்கள்
HDFC வங்கி ரூ. 36,961 கோடி நிகர லாபத்துடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் (ரூ. 33,011 கோடி), எஸ்பிஐ (ரூ. 31676 கோடி), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ( ரூ.24,184 கோடி), ஐசிஐசிஐ வங்கி, (ரூ.23,339 கோடி), இன்ஃபோசிஸ் (ரூ.21,235 கோடி) மற்றும் வேதாந்தா (ரூ.17,245 கோடி) ஆகியவை அடுத்தடுத்து டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளது.
கடைசி 15 இடங்கள்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா – 17,093.80 கோடி ரூபாய்
JSW ஸ்டீல் – 16,702.00 கோடி ரூபாய்
என்டிபிசி – 16,111.40 கோடி ரூபாய்
ஐடிசி – 15,057.80 கோடி ரூபாய்
HDFC – 13,742.20 கோடி ரூபாய்
ஆக்சிஸ் வங்கி – 13,025.50 கோடி ரூபாய்
விப்ரோ – 12,135.30 கோடி ரூபாய்
ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா – 12,015.00 கோடி ரூபாய்
கோல் இந்தியா – 11,201.60 கோடி ரூபாய்
HCL டெக்னாலஜிஸ் – 10,874.00 கோடி ரூபாய்
கெயில் (இந்தியா) – 10,364.00 கோடி ரூபாய்
REC – 10,045.90 கோடி ரூபாய்
பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் – 10,021.90 கோடி ரூபாய்
இந்துஸ்தான் ஜிங்க் – 9,630.00 கோடி ரூபாய்
என்எம்டிசி – 9,398.50 கோடி ரூபாய்
India’s 25 most profitable companies; check who took first place
India’s 25 most profitable companies; check who took first place இந்தியாவிலேயே அதிக லாபம் பெறும் நிறுவனம் எது தெரியுமா..?