சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சி மெதுவான வளர்ச்சியினை காணத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு தேவை குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இன்ஜினியரிங், ஜெம்ஸ் & ஜூவல்லரி உள்ளிட்ட முக்கிய துறைகளில் தாக்கம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவிலான பிரச்சனை வரவிருக்கும் மாதங்களில் சரியாகுமா? என்பதும் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் என்ஆர்ஐ-கள் முதலீடு செய்ய சிறந்த 5 வழிகள்!

தேவை சரியலாம்
சர்வதேச பணவீக்கம், ரஷ்யா – உக்ரைன் போர், சீனா – தைவான் பிரச்சனை என பலவும் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகளவில் தேவையானது சரிவினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மெதுவான வளர்ச்சி
சர்வதேச அளவிலான வணிக வளர்ச்சியானது 2022ம் ஆண்டில் 3% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னதாக 4.7% ஆக மதிப்பிடப்பட்டது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், மெதுவாக வளர்ச்சியால் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் சரியாகலாம்
குறிப்பாக OECD அமைப்பு, ஜி20 நாடுகளின் வளர்ச்சி விகிதமானது ஏப்ரல் – ஜூன் காலாண்டில் கணிசமான தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன. இதனால் அங்கு வணிக வளர்ச்சி விகிதமானது மந்த நிலையில் இருப்பதை காண முடிந்தது. இதனால் அங்கு தேவையானது சரிவினைக் கண்டு இருந்தது. எனினும் இது வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்கலாம் என ஏற்றுமதியாளர்கள் நம்புகின்றனர்

வர்த்தக பற்றாக்குறை
ஏற்றுமதி குறைந்து இறக்குமதியானது அதிகரித்தால், அது வர்த்தக பற்றாக் குறையை அதிகரிக்கும். இது மேற்கொண்டு உள்நாட்டு கரன்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு வேலையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே இந்தியாவின் சரக்கு ஏற்றுமதிகள் 1.15% குறைந்து, 33 பில்லியன் டாலராக இருந்தது. இதற்கிடையில் வர்த்தக பற்றாக்குறையானது இரண்டு மடங்கு அதிகரித்து, 28.68 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கும் பிரச்சனை தான்
ஆகஸ்ட் மாதத்தில் பொறியியல், ஜெம் & ஜூவல்லரி, ஜவுளிகள், பருத்தி நூல்/மேடை பொருட்கள் மற்றும் துணிகள் பலவற்றிலும் எதிர்மறையான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளன. இது இனி வரவிருக்கும் மாதங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் ஏற்படும் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Global slowdown may affect India’s exports
Global slowdown may affect India’s exports/இந்தியாவுக்கு பிரச்சனையாக மாறும் சர்வதேச மந்த நிலை.. எப்படி தெரியுமா