சிமெண்ட் பங்குகளின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் சிமெண்ட் பங்குகளின் விலையானது இனி அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் சிமெண்ட்டின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறது.
இது கடந்த ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் 2 – 3% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மூன்று ஆண்டுகள் அடிப்படையில் CAGR விகிதம் 5 – 6% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒயின் ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்.. ஆன்லைன் மோசடியா?
தேவை அதிகரிக்கலாம்
இந்த மழைக்காலம் முடிந்த பிறகு சிமெண்ட் தேவையானது பெரியளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிமெண்ட் நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் தரகு நிறுவனம் சிமெண்ட் பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
பங்கு வாங்க பரிந்துரை
லார்ஜ்கேப் பங்கான டால்மியா பாரத் மற்றும் பிர்லா கார்ப் உள்ளிட்ட மிட் கேப் பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் சிமெண்ட் துறையானது நேர்மறையான வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உள்கட்டமைப்பு, வீடு கட்டுமானம் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி நன்றாக இருக்கலாம்.
ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ்
ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் 4 பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது.
சோபா நிறுவனத்தினை 726 ரூபாய் வாங்கவும், 750 ரூபாயினை இலக்கு விலையாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் ஆக 715 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் – 222 ரூபாயில் வாங்க பரிந்துரை செய்துள்ளது. இலக்கு விலை 235 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 216 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர்.
பால்ராம்பூர் சினி & டிக்சான் டெக்னாலஜி
பால்ராம்பூர் சினி – 376 ரூபாய்க்கு வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையினை 395 ரூபயாகவும், ஸ்டாப் லாஸ் 366 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர்.
டிக்சான் டெக்னாலஜிஸ் – பங்கினை 4372 ரூபாய்க்கு பரிந்துரை செய்துள்ள நிறுவனம், இலக்கு வியையானது 4470 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே ஸ்டாப் லாஸ் ஆக 4325 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
நிஃப்டி
நிஃப்டி டெக்னிக்கலாக பார்க்கும்போது, 20 நாள், 50 நாள், 100 நாள், மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் மேலாக காணப்படுகின்றது. இதனால் நிஃப்டி தொடர்ந்து மீடியம் டெர்மில் ஏற்றம் காண ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Brokerage firm has recommended buying the cement company stock
Brokerage firm has recommended buying the cement company stock/இந்த பங்குகள் உங்கள் வசம் இருக்கா.. இல்லாட்டி வாங்கி வைங்க.. நிபுணர்கள் பலே கணிப்பு!