’இன்னளே வரே’ மூவி ரிவ்யூ..ஏமாற்றுபவன் ஏமாற்றமே அடைவான்..கிரைம் திரில்லர் பிரியர்களுக்கு ஏற்ற படம்

நடிகர்கள்: ஆசிஃப் அலி, ஆன்டணி வர்கீஸ், இர்ஷாத், ரோனி டேவிட், நிமிஷா சஜயன், அதுல்யா சந்த்ரா

இயக்கம் : ஜிஸ் ஜாய்

கதை: பாபி, சஞ்சய்

கேமரா: ராஜேஷ் நடராஜன்

Rating:
3.0/5

சென்னை: பெண்ணாசையும், மற்றவர்களை மதிக்காத போக்கையும் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் ஹீரோ சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகும் கதைதான் இன்னளே வரே.சமீப கால மலையாளப்படங்கள் நல்ல திரைக்கதை, கிரைம், திரில்லர் என தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றனர்.

மலையாளப்படமான இன்னளே வரே மலையாளப்படம் தமிழில் ஓடிடி தளத்தில் சோனி லைவ்-வில் வெளியாகியுள்ளது. கிரைம், திரில்லர் பட பிரியர்கள் பார்க்கலாம். ஓடிடி தளங்களில் தமிழ் டப்பிங் படம்

தனது தொடர் தோல்வி படங்களால் தடுமாற்றத்திற்கு உள்ளாகும் இளம் சினிமா ஹீரோ அதில் இருந்து விடுபட நினைத்து மேலும் சிக்கலில் சிக்கிக் கொள்வதே இப்படத்தின் கதை.

கதை இதுதான்

வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆதிசங்கர்( ஆசிப் அலி) தனது படங்கள் சரியாக ஓடாததால் அடுத்து வெளிவரப்போகும் படம் நன்றாக ஓட வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார். ஆனால் படத்தை பார்க்கும் மூத்த இயக்குநர் சற்று சிக்கல் தான் என சொல்கிறார். இதற்கு இடையே இவரை வைத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் படமெடுத்த தயாரிப்பாளர் ஒருவர் அந்த படத்தின் வேலைகள் நின்று போனதால் நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கிறார். படத்தை டப்பிங் பேசி முடித்து கொடுத்தால் வெளியிடுவேன் என்று ஆதிசங்கரிடம் அவர் கெஞ்சுகிறார். 4 ஆண்டுகளுக்கு முன் எடுத்த படம் தற்போது வெளியானால் மேலும் தன் இமேஜ் கெட்டுப்போகும் என்று மறுத்து விடுகிறார் ஆதிசங்கர்.

 படம் ஃபிளாப் ஆக சிக்கலில் சிக்கும் ஹீரோ

படம் ஃபிளாப் ஆக சிக்கலில் சிக்கும் ஹீரோ

இதற்கு மேல் நீங்கள் மறுத்தால் என்னால் தற்கொலை செய்து கொள்வதை தவிற வேறு வழியில்லை என்கிறார் தயாரிப்பாளர். என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள் என்று ஆதிசங்கர் மறுத்து விடுகிறார். இதற்கிடையே ஆதிசங்கர் தன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதியை கேளிக்கை விடுதிகளிலும், பெண்களிடமும் செலவழிப்பதிலும் நேரத்தை செலவழிகிறார். வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருடைய மனைவியான முன்னாள் நடிகையுடன் முறையற்ற தொடர்பில் இருக்கிறார். இடையில் தொழில் அதிபரான ஒரு பெண்ணையும் காதலிக்கிறார். இதற்கிடையே அவரது படம் வெளியாக அது படு ஃபிளாப் ஆகிறது. கடனை ஈடுகட்ட கிளீனிங் லோஷன் விளம்பர படத்தில் நடிக்க 3 கோடி ரூபாய் பேசி ஒரு பார்ட்டியை அழைத்து வருகிறார் மேனேஜர் ஜோமி. ஆனால் அந்த தொழிலதிபரையும் அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார் ஆதிஷங்கர்.

 படம் தோல்வி, காதலியின் நெருக்குதல் அல்லாடும் இளம் ஹீரோ

படம் தோல்வி, காதலியின் நெருக்குதல் அல்லாடும் இளம் ஹீரோ

படம் தோல்வி அடைந்ததால் பணத்தை கொடுத்த பைனான்சியர் மிரட்டி அவருடைய இரண்டு லக்சரி கார்களையும் பறித்து சென்று விடுகிறார். கார் இல்லாத நிலையில் தன் அப்பா பயன்படுத்திய பழைய ஃபியட் காரை பயன்படுத்தலாம் என்று முடிவு எடுக்கிறார் ஆதிசங்கர். இதற்கிடையே இரவு பார்ட்டியில் இருக்கும்போது ஆதிசங்கருக்கு போன் செய்யும் முன்னாள் நடிகை தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி கர்ப்பத்தை கலைக்கும் மாத்திரையை உடனே வாங்கி வரும்படி நெருக்குகிறார். அவருக்காக முகத்தை மறைத்தப்படி மெடிக்கல் ஷாப்பில் மருந்தை வாங்கிக்கொண்டு ஃபியட் காரை ஸ்டார்ட் செய்ய அது ஸ்டார்ட் ஆகாததால் அவ்வழியாக வரும் காரில் லிஃப்ட் கேட்கிறார்.

 அழகாக திட்டம் போட்டு நடிகரை கடத்தும் இளம்பெண்

அழகாக திட்டம் போட்டு நடிகரை கடத்தும் இளம்பெண்

பெரிய நடிகரே தனது காரில் லிஃப்ட் கேட்பதா என மகிழ்ந்து போகிறார் ஐடி மென்பொறியாளரான காரை ஓட்டி வரும் பெண் அஞ்சலி (Nimisha Sajayan), என் காரை நீங்கள் எடுத்துச் செல்லுங்கள் சார், என் கணவர் உங்கள் ரசிகர். இன்று என் திருமண நாள் என் வீட்டுக்கு வந்து ஒரு நிமிடம் வாழ்த்துச் சொல்லிவிட்டு போக முடியுமா என்று கேட்கிறார், கார் ஓசியில் கொடுக்கும் பெண் என்பதால் ஈகோவை விட்டு அவருடன் அவர் பிளாட்டுக்கு செல்கிறார் ஆதி சங்கர். ஆனால் அங்கு அவர் ஒரு ரூமில் சாமர்த்தியமாக சிறைபிடிக்கப்படுகிறார். அதன் பின்னர்தான் தெரிகிறது தன்னை அந்தப்பெண் ஆண் நண்பருடன் சேர்ந்து கடத்தியுள்ளது. ஆதிசங்கர் போனை எடுத்துக்கொண்ட இருவரும் அவரிடம் ரூ.1.5 கோடி பணய தொகை கேட்கின்றனர்.

 1.5 கோடி ரூபாய்க்காக கடத்தப்படும் இளம் நடிகர்

1.5 கோடி ரூபாய்க்காக கடத்தப்படும் இளம் நடிகர்

அவருடைய போனை நவீன டெக்னாலஜியை (அது என்ன டெக்னாலஜியோ) பயன்படுத்தி அனைவரிடமும் ஆதிசங்கர் கடத்தப்படாதது போலவே பேசுகின்றனர். ஆதிசங்கர் அறையிலிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைகிறது. க்டைசியில் ஆதிசங்கர் குரலில் பேசி மேனேஜர் மூலம் ரூ.1.5 கோடி பணத்தை இருவரும் பெறுகின்றனர். இந்த கேப்பில் தப்பிக்கும் ஆதிசங்கரர் தன் நண்பர் போலீஸ் அதிகாரியின் உதவியை நாட கடத்திய பெண் ஆதி சங்கர் தனது காதலன் தன்னை அடித்து துன்புறுத்தி பொய்க்கதை சொல்கிறார் என நம்ப வைக்கிறார். இதற்கு பின் ஆதிசங்கர் உண்மையை வெளிகொண்ர்ந்தாரா? பணத்தை மீட்டாரா? எதற்காக அந்தப்பெண்ணும், அவர் ஆண் நண்பரும் ஆதிசங்கரை கடத்தினார்கள் என்கிற முடிச்சை அவிழ்ப்பதே மீதி கதை. நன்றாக முடிச்சை அவிழ்த்துள்ளனர். எதிர்பாராத ட்விஸ்டும் படத்தில் உள்ளது.

 படத்தின் பிளஸ்

படத்தின் பிளஸ்

படத்தின் பிளஸ் என்று பார்த்தால் நடித்துள்ள ஒவ்வொருத்தருடைய நடிப்பும் இயல்பாக பொருந்துகிறது. கடத்தப்பட்டு வீட்டில் அடைக்கப்பட்டுள்ள ஆதிசங்கர் தப்பிக்க எடுக்க முயற்சிகளும் அதை தடுக்க போராடும் பெண்ணின் போராட்டமும் நம்மை சீட்டின் நுணிக்கே கொண்டு வந்து உட்கார வைக்கிறது. ஆதிசங்கர் பக்கம் இருந்து பார்க்கும் பொழுது அவர் பக்கம் நியாயம், அவர் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு நம்மிடம் தோன்றுகிறது. அதேநேரம் எதற்காக 1.5 கோடி ரூபாய் கேட்டு இவரை அடைத்து வைத்துள்ளார்கள் என்ற சஸ்பென்சையும் அழகாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஜிஸ் ஜாய் (Jis Joy).

 கடைசி அரைமணி நேரம் வேகமெடுக்கும் கதை

கடைசி அரைமணி நேரம் வேகமெடுக்கும் கதை

கடைசியில் நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி ஆதிசங்கரின் குரல் போலவே அவருடைய செல்போனில் இருந்து பேசி பணத்தை பெறுவதும், போலீஸ் வந்தவுடன் பிளேட்டை திருப்பி போட்டு அஞ்சலி தப்பிப்பதும் சுவாரஸ்யமான காட்சிகளாக உள்ளது. அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமாக நகர்வதும் இறுதியில் அரை மணி நேரம் வேகமாக நகர்வதும் கதையை சுபமாக முடிப்பதும் பிளஸ் ஆக பார்க்கலாம்.

 படத்தின் மைனஸ்

படத்தின் மைனஸ்

மைனஸ் என்று எடுத்துக் கொண்டால் ஆதிசங்கரர் எனும் நடிகர் ஒரு படம் தோல்வி அடைந்ததும் உடனடியாக தெருவுக்கா வந்து விடுவார்? காருக்குக்கூட வழியில்லாமல் இருப்பார் என்பது போன்ற காட்சிகள் நம்ப முடியாததாக உள்ளது. பிரபல நடிகர் சாலையில் செல்லும்போது சில சமயம் யாரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேடிக்கை. இறுதிக் காட்சியில் 1.5 கோடி ரூபாய் ஏமாற்றி பணத்தை வாங்கிச் செல்லும் ஆண் (Antony Varghese) பெண் (Nimisha Sajayan) இருவரையும் போலீஸுடன் சென்று பார்க்கும் ஆதிசங்கரின் மேனேஜர் இவர்தான் பணத்தை என்னிடம் இருந்து வாங்கி சென்றார் என்று கூறாமல் மௌனமாக வேடிக்கை பார்ப்பது இடிக்கிறது. ஆதிசங்கரை கடத்திய பெண் பேசும் பேச்சுக்கு சரியான பதில் தராமல் ஆதிசங்கர் அடிக்க அடிக்க பாய்வதுபோல் காட்சி அமைத்தது சீரியல் போல் உள்ளது.

 சின்ன சின்ன சொதப்பல்கள்

சின்ன சின்ன சொதப்பல்கள்

என்னதான் பிளேட்டை மாற்றி போட்டு சொன்னாலும், போலீஸ் அதிகாரி அதுவும் நடிகரின் நண்பர் நிதானமாக என்ன நடந்தது என்பதை கூடவா விசாரிக்காமல் இருப்பார். போன் சைபர் கிரைம் எல்லாம் என்ன செய்கிறார்கள். ஆதிசங்கரர் காலில் காயம் பட்டது எப்படி. அந்த ரூமில் உள்ள ரத்தக்கரைகளை ஆய்வு செய்வது, என்னதான கழுவி இருந்தாலும் தடயவியல் துறையினர் எடுத்துவிடுவார்கள். இதையெல்லாம் குறித்து விசாரித்து இருந்தால் குற்றவாளி சிக்குவார். அது பற்றியும் படத்தில் சரியாக குறிப்பிடவில்லை. இப்படி சில சில குறைபாடுகள் முக்கிய இடங்களில் நெருடலை ஏற்படுத்துகின்றன. இவைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் படம் சிறப்பானதாக உள்ளது என்று சொல்லலாம்.

ஹைலைட்

ஹைலைட்

வன்முறை, துப்பாக்கி சண்டைகள் இல்லாத திரைக்கதை. சிறிய சம்பவத்தை வைத்துக்கொண்டு படம் எடுப்பது போன்றவைகள் இல்லாமல் மிக அழகாக கோர்க்கப்பட்ட ஒரு கதை, அதை ஒரு இடத்திலும் லாஜிக் குறையாதபடி ஆங்காங்கே முன்கூட்டியே நமக்கு அதற்கான காட்சிகளை விளக்கி விடுவது, பின்னர் அதற்கான நடைமுறைகள் வரும் பொழுது நமக்கு அந்த காட்சி சரியாக அமைந்துள்ளது என்று நம்ப வைப்பது என இயக்குனர், எடிட்டர், திரைக்கதை ஆசிரியரின் (Sanjay) திறமையை காண்பிக்கிறது. கிரைம், த்ரில்லர் படங்களை தாண்டி ஒரு நல்ல படத்தை ஒரு விறுவிறுப்பான ஒரு படத்தை பார்க்க விரும்புபவர்கள் இப்படத்தை தாராளமாக பார்க்கலாம். ஓடிடி தளத்தில் மலையாள படங்களில் கிரைம் திரில்லர் படங்கள் அதிகம் வருவதும் அது மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வருவது சமீபகாலமாக அனைத்து மொழி ரசிகர்களையும் சந்தோஷமடைய செய்துள்ளது. அந்த வரிசையில் தமிழில் ரசிகர்கள் ரசிக்கும் ஒரு பொழுதுபோக்கு பட வரிசையில் இந்தப் படமும் சேர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.