உலகை ஆளும் இந்திய பெண்கள்.. பெருமை சேர்க்கும் சாதனை பெண்கள்!

இந்தியர்களின் திறமையால் இன்று பல அண்டைகளின் நாடுகளின் முன்னணி நிறுவனங்களின், தலைமை பொறுப்புகளிலும் தலைமை வகித்து வருகின்றனர்.

இந்தியர்களின் கடும் உழைப்பு, திறமை, நாணயம், பொறுமை, விசுவாசம் உள்ளிட்ட அம்சங்களை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. இதனால் தான் தலைமை பொறுப்புகளில் இந்தியர்களை அமர வைக்கின்றன என்பதை, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உலகை ஆளும் இந்தியா வம்சாவளியை சேர்நத CEOக்கள்.. எந்தெந்த நிறுவனங்களில்?

தேவிகா புல்சந்தனி,ஓகில்வி

தேவிகா புல்சந்தனி,ஓகில்வி

ஓகில்வி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் ஆண்டி மெயினிடம் இருந்து, இந்த ஆண்டு இறுதியில் இருந்து தேவிகா புல்சந்தனி பொறுப்பேற்கவுள்ளார். 93 நாடுகளில் 131 அலுவலகத்தினை கொண்டுள்ள இந்த நிறுவனம். இதில் விளம்பரம், அனுபவம், ஹெல்த், பொது தொடர்பு உள்ளிட்ட பிரிவுகளில் உள்ளிட்ட வணிகங்களுக்கு பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஹ்ராடூனில் கல்வி பருவத்தை முடித்தவர், கலிப்போர்னியாவில் தனது கல்லூரி படிப்படை முடித்தவர்.

 

லீனா நாயர்

லீனா நாயர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த லீனா நாயர், இவர் இந்தாண்டு இறுதியில் சேனல் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் சிஇஓ இவர் ஆகும். இவர் முன்னதாக யூனிலீவரின் தலைமை மனிதவள அதிகாரியாக இருந்தவராவர்.

அருணா ஜெயந்தி
 

அருணா ஜெயந்தி

கேப்ஜெமினியின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட பிரிவுகளின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் 2011 முதல் 2015 வரையில் கேப் ஜெமினி இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளர். அதோடு ஆலோசனை, தொழில் நுட்பம், அவுட்சோரஸிங் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த வணிகத்தினையும் நிர்வகித்து வந்தார். மும்பையில் படித்தவர் இன்று கேப்ஜெமினியின் முக்கிய பிரிவுகளின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

ஜெய ஸ்ரீ உல்லால்

ஜெய ஸ்ரீ உல்லால்

லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த ஜெய ஸ்ரீ உல்லால், சாண்டா கிளாரா யுனிவர்சிட்டி மற்றும் சான் பிரான்சிஸ்கோ யுனிவர்சிட்டயில் படித்தவர். இவர் அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவராவர். அக்டோபர் 2008 முதல் அரிஸ்டாவினை வழி நடத்தி வருகின்றார். 2014ல் வெற்றிகரமான ஐபிஓவுக்கு வழி நடத்திய பெருமையும் ஜெய ஸ்ரீக்கு உண்டு.

அஞ்சலி சுட் (விமியோ)

அஞ்சலி சுட் (விமியோ)

கடந்த 2017 முதல் விமியோவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் அஞ்சலி சுட், தலைமை செயல் அதிகாரி ஆவதற்கு முன்னதாக விமியோவின் பொது மேலாளராகவும், சந்தைப்படுத்தல் தலைவராகவும் இருந்து வந்தார். இது தவிர அமேசான் மற்றும் நிதி நிறுவனம், மீடியா உள்ளிட்ட துறைகளில் முக்கிய பதவிகளை வகித்தவர்.

ரேவதி அத்வைதி (ஃப்ளெக்ஸ்)

ரேவதி அத்வைதி (ஃப்ளெக்ஸ்)

ரேவதி அத்வைதி கடந்த 2019 முதல் ஃப்ளெக்ஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகின்றார். பல முக்கிய பொறுப்புகளை வகித்தரவான ரேவது, பிலானியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்தவர்.

அம்ரபாலி கான்

அம்ரபாலி கான்

மும்பையில் பிறந்த அம்ரபாலி கான், கலிப்போர்னியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். கடந்த டிசம்பர் 2021ல் ஒன்லி பேன்ஸின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அதன் நிறுவனர் டிம் ஸ்டோலிக்குப் பிறகு இந்த பதவிக்கு வந்தார். இவர் இதற்கு முன்னதாக யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரியாக இருந்தவர்.

பிரியா லக்கானி (செஞ்சுரி டெக்)

பிரியா லக்கானி (செஞ்சுரி டெக்)

பிரியா லக்கானி OBE செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எட்டெக் நிறுவனமான செஞ்சுரி டெக்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாவாராவர். சர்வதேச அளவில் AI-ல் இயங்கும் கற்றல் கருவிகளை உருவாக்க செஞ்சுரி டெக் செயல்படுகின்றது.

பத்ம ஸ்ரீ வாரியர் (ஃபேபில்)

பத்ம ஸ்ரீ வாரியர் (ஃபேபில்)

ஐஐடியின் முன்னாள் மாணவரான வாரியர், 2019ல் மனநலம் மற்றும் நல வாழ்வை மையமாகக் கொண்ட, ஃபேபில் நிறுவனத்தினை உருவாக்கினார்,. லிங்க்ட் இன் பக்கத்தின் படி அவர் இந்த தளத்தின் நிறுவனம் மற்றும் தலைமை செயல் அதிகாரியாவார். இதற்கு முன்னதாக அவர் மைக்ரோசாப்ட் மற்றும் ஸ்பாட்டிபை குழுவிலும் இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These Indian women too are leading big global organizations: check details here

These Indian women too are leading big global organizations: check details here/உலகை ஆளும் இந்திய பெண்கள்.. பெருமை சேர்க்கும் சாதனை பெண்கள்!

Story first published: Thursday, September 8, 2022, 16:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.