ஐரோப்பிய பெண்ணைக் கரம்பிடித்த மதுரை இளைஞர்; ராமநாதபுரம் கோயிலில் நடந்த திருமணம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் காசிநாதன்-சூரியகலா மகன் காளிதாஸ் (31), இவர் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசில் உள்ள நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் தனது சொந்த ஊருக்கு வந்த அவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் செக் குடியரசில் தன்னுடன் பணியாற்றிய ஹானா பொம்க்லொவா என்ற பெண்ணைக் காதலித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் வந்த காளிதாஸ் ஆன்லைன் மூலம் தன்னுடைய காதலைத் தொடர்ந்து வந்துள்ளார்.

இந்தச் சூழலில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து தங்களுடைய திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, ஹானா பொம்க்லொவா ஐரோப்பியாவிலிருந்து தமிழகம் வந்து, தன் காதலர் காளிதாஸைக் கரம்பிடித்தார்.

இவர்களுடைய திருமணம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உப கோயிலான பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் மணமக்கள் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

மணமக்கள் காளிதாஸ் -ஹானா பொம்க்லொவா

இவர்களுடைய திருமணம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உப கோயிலான பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் மணமக்கள் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

இத்திருமணத்தில் மணமகனும் மணப்பெண்ணும் பட்டுவேட்டி, பட்டுசேலை அணிந்திருந்தனர்.

மணப்பெண்ணுக்கு தமிழக பாரம்பரிய முறை மிகவும் பிடித்திருந்ததால் அந்தக் கலாசாரத்தின்படி காளிதாஸ் திருமணம் செய்துள்ளார். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மணமக்களுடன் போட்டி போட்டு செல்பி எடுத்துக்கொண்டனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மணமக்கள் சாமி தரிசனம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காளிதாஸ் பேசியபோது, செக் குடியரசில் வேலை பார்த்தபோது இருவரும் நட்பாக பழகி வந்தோம். தமிழகம் வந்தவுடன், அவரை விட்டுப் பிரிந்ததுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. பின்னர் ஆன்லைன் மூலம் என்னுடைய காதலை வெளிப்படுத்தினேன். அவரும் என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டார் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு காதலித்து வந்தோம். பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பிறகு, கண்டிப்பாக திருமணம் தமிழகத்தில் தமிழ்ப் பாரம்பரிய முறைப்படிதான் திருமணம் நடக்க வேண்டும் என அவரிடம் கூறிவிட்டேன்.

தமிழர் பாரம்பரிய முறைப்படி எப்படி திருமணம் நடக்கும் என்பதை அவரிடம் நான் தெரிவித்த போது, அவருக்கு அதே போல் திருமணம் செய்துகொள்வோம் என மகிழ்ச்சியாகக் கூறினார். இதையடுத்து இருவீட்டார் சம்மதம் தெரிவித்த உடன், திருமண தேதி முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் ஐரோப்பாவில் இருந்து தனது பெற்றோருடன் இங்கு வந்தார். தமிழர் பாரம்பரிய முறைப்படி பட்டுப் புடவை கட்டி, தலை நிறையப் பூ வைத்து சொந்த பந்தங்கள் புடை சூழ எங்கள் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.