ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை! லட்சங்களில் ஒருமுறை நடக்கும் அதிசயம்


19 வயது பெண் ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உறவு கொண்டதில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இருவருக்கும் சேர்த்தபடி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் 10 லட்சங்களில் ஒருமுறை நடக்கக்கூடிய அதிசயம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 19 வயது பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார், ஆனால் அவர்களின் உயிரியல் தந்தைகள் வெவ்வேறு நபர்கள் ஆவர். இந்த நிகழ்வு ஆச்சரியமாக இருந்தாலும், இது மிகவும் சாத்தியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது Heteropaternal Superfecundation என்று அழைக்கப்படுகிறது, இது மாதவிடாய் சுழற்சியின் போது வெளியிடப்படும் இரண்டாவது கருமுட்டையானது வெவ்வேறு ஆணின் விந்தணுக்களால் தனித்தனி உடலுறவில் கருத்தரிக்கப்படும்போது ஏற்படுகிறது என்று Biomedica மருத்துவ இதழ் கூறுகிறது.

ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை! லட்சங்களில் ஒருமுறை நடக்கும் அதிசயம் | Brazil Woman Gives Birth Twins2 Biological DadsRepresentative Image

வெவ்வேறு தந்தைகள் என தாய்க்கு தெரியவந்தது எப்படி?

ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உறவில் ஈடுபட்டு ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் இரட்டைக்குழந்தைகளைப் பெற்றார். குழந்திகளுக்கு முதல் பிறந்தநாள் நெருங்கி வந்த நிலையில், அப்பெண் குழந்தைக்கு யார் உண்மையான தந்தை என்பதை தெரிந்துகொள்ள நினைத்தார்.

அவரது சந்தேகத்தை சரிபார்க்க ஒரு தந்தைவழி சோதனை எடுக்க முடிவு செய்தாள். அந்தப் பெண் ஒரு மனிதனைத் தந்தையாகக் கருதி அவனுடைய டிஎன்ஏவைச் சேகரித்தாள். இருப்பினும், ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே அதில் பொருந்தியது.

பிறகு அவர் வேறொரு ஆணுடன் உடலுறவு கொண்டதை நினைவில் வைத்து, மற்றோரு நபரையும் டிஎன்ஏ சோதனைக்கு அழைத்துள்ளார். முடிவுகள் வெளியானபோது அவர் ஆச்சரியப்பட்டார். “இப்படி ஒன்று நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை” அவரது டிஎன்ஏ மற்றோரு குழந்தையுடன் ஒத்துப்போனது.

ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை! லட்சங்களில் ஒருமுறை நடக்கும் அதிசயம் | Brazil Woman Gives Birth Twins2 Biological DadsNewsflash

அப்பெண்ணின் மருத்துவர் சொன்ன தகவல்

அப்பெண்ணின் மருத்துவர் துலியோ பிராங்கோ கூறுகையில், ஒரே தாயிடமிருந்து இரண்டு முட்டைகள் வெவ்வேறு ஆண்களால் கருத்தரிக்கப்படும்போது இது சாத்தியமாகும் என்று கூறினார்.

மேலும், தாய்க்கு இருக்கும் அதே மரபணு அமைப்பு இரு குழந்தைகளுக்கும் உள்ளது என்று மருத்துவர் கூறினார்.

அவர் தனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர் பார்க்கவில்லை என்றும், உலகில் 20 நிகழ்வுகள் மட்டுமே உள்ளன என்றும் மருத்துவர் கூறினார்.

ஒரே நேரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வெவ்வேறு தந்தை! லட்சங்களில் ஒருமுறை நடக்கும் அதிசயம் | Brazil Woman Gives Birth Twins2 Biological DadsNewsflash

இப்போது, 16 மாதங்கள் ஆன நிலையில், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தற்போது தந்தைகளில் ஒருவரே இருப்பதாக தாய் கூறினார்.

இதேபோன்ற ஒரு நிலையில், 2015-ல் நியூ ஜெர்சியில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பின்படி, ஒரு ஆண் இரட்டைக் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே தந்தையாக இருந்ததால், இரண்டு குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே குழந்தை ஆதரவை செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.