புதுடில்லி: டில்லியில், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான கர்தவ்யா பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.,8) திறந்து வைத்தார்.
மத்திய அரசின், ‘சென்ட்ரல் விஸ்டா’ மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையின் பெயர், கர்தவ்யா பாதை (கடமை பாதை) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப் பாதையின் இரு பக்கங்களிலும் பச்சைபசேலென புல்வெளி, வாகன நிறுத்துமிடம், மக்கள் அமர்ந்து இளைப்பாற நாற்காலிகள், கழிவறைகள், பல்வேறு உணவகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கர்தவ்யா பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அங்கு இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயர நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் திறந்து வைத்து சிலைக்கு மலர் தூவி மரியதை செலுத்தினார்.
புதுடில்லி: டில்லியில், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான கர்தவ்யா பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.,8) திறந்து வைத்தார்.மத்திய அரசின், ‘சென்ட்ரல் விஸ்டா’
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்