சென்னை: கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் கடந்த மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கார்த்தி ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்த இந்தப் படத்தை முத்தையா இயக்கியிருந்தார்.
கிராமத்துப் பின்னணியில் உருவான விருமன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கம்பேக் கொடுத்த கார்த்தி
கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், வசூல் ரீதியாகவும் சுமாரான வரவேற்பே கிடைத்தது. இந்நிலையில், கடந்த மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியான விருமன் திரைப்படம், கார்த்திக்கு சிறப்பான கம்பேக் கொடுத்தது. முத்தையா இயக்கியிருந்த இப்படத்தில், கார்த்தி ஜோடியாக அதிதி ஷங்கர் அறிமுகமானார். கிராமத்துப் பின்னணியில் வெளியான விருமனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிஸியான வந்தியத் தேவன்
விருமன் படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், யுவன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’, வரும் 30ம் தேதி வெளியாகிறது. மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன், மல்டி ஸ்டார் படமாக உருவாகியுள்ளது. ஆனாலும், கார்த்தி வந்தியத் தேவன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

விருமன் ஓடிடி ரிலீஸ் தேதி
பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸை முன்னிட்டு, அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கார்த்தி பிசியாக காணப்படுகிறார். இந்நிலையில், அவரது அடுத்த படமான சர்தார், தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திரையரங்குகளில் வெற்றிப் பெற்ற விருமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை, படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா தயாரித்திருந்த இந்தப் படம், வரும் 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமேசானில் வெளியாகிறது.

ஓடிடி ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல் சூர்யா தயாரித்த உடன்பிறப்பே, ஜெய்பீம் உள்ளிட்ட 4 படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்த வரிசையில் இப்போது கார்த்தியின் விருமனும் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. விருமன் படத்துக்கு திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்ததால், ஓடிடி ரசிகர்களிடமும் நல்ல வீவ்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.