கேப்டன் டு பிரம்மாஸ்திரா – தியேட்டர் முதல் OTT வரை – இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன?

கொரோனா தாக்கத்துக்குப் பிறகு இப்போதுதான் திரையுலகம் மெல்ல மெல்லப் பழைய நிலைமைக்குத் திரும்பிவருகிறது. இதுவரை வெளியாகாமல், வெளியாக வாய்ப்பில்லாமல் முடங்கிக் கிடந்த படங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. புதிய பெரிய பட்ஜெட் படங்களின் அறிவிப்புகளும் அடுத்தடுத்து வந்த வண்ணமே இருக்கின்றன. ஓ.டி.டி-யிலும் படங்கள் வெளியாகின்றன, திரையரங்குகளிலும் படங்கள் வெளியாகின்றன. தியேட்டர்களில் முன்புபோல மக்கள் கூட்டம் இல்லையென்றாலும் உச்ச நட்சத்திரத்தின் படங்களுக்குக் கூட்டம் கூடவே செய்கிறது.

சரி, இந்த செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் என்னென்ன படங்கள் வெளியாகின்றன? ஒரு குட்டி அறிமுகம் இதோ…

கேப்டன் (தமிழ்)

கேப்டன்

ஆர்யா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சிம்ரன், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், இயக்குநர் சக்தி சௌந்தர ராஜன் இயக்கத்தில் இன்று (செப்டம்பர் 8) திரையரங்குகளில் வெளியாகிறது ‘கேப்டன்’. தி ஷோ பீபுள், திங் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் படம். ஏலியன்களை வேட்டையாடும் ராணுவ வீரன் என்பதுதான் இதன் ஒன்லைன்.

பிரம்மாஸ்திரா: முதல் பாகம் – ஷிவா (இந்தி)

பிரம்மாஸ்திரா

சமீபகாலமாகத் தொடர் தோல்விகளையே சந்தித்துவரும் பாலிவுட்டின் அடுத்த நம்பிக்கைமிக்க ரிலீஸ் இந்த ‘பிரம்மாஸ்திரா’. ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் இந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல இந்திய மொழிகளில் ஒரு பான் இந்தியப் படமாக செப்டமர் 9-ம் தேதி வெளியாகிறது. ஆன்மிகம், ஃபேன்டஸி, அறிவியல் என அனைத்தின் கலவையாக உருவாகியிருக்கும் இந்தப் படம் ஒரு தொடராக மூன்று பாகங்கள் வரை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த முதல் பாகத்தின் பெயரை ‘ஷிவா’ என்று வைத்துள்ளனர். ஐமேக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிக்கலாம்.

Oke Oka Jeevitham/கணம் (தெலுங்கு/தமிழ்)

Oke Oka Jeevitham

ஷர்வானந்த், ரித்து வர்மா, அமலா அக்கினேனி, நாசர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் நாயகனின் நண்பர்களாக வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி நடிக்க, தமிழில் சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கும் இந்தப் படமும் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டைம் டிராவல் போன்ற சுவாரஸ்ய களத்தைக் கொண்டுள்ள இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Not Reachable (தமிழ்)

விஸ்வா ஸ்ரீதரன், சாய் தன்யா, பிர்லா போஸ், காதல் சரவணன் நடிப்பில் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது இந்த க்ரைம் த்ரில்லர். ஒரு ஆப் மூலமாகத் துப்பு கிடைத்து ஒரு பெண் கடத்தப்பட்டதை அறிகிறார் ஒரு காவல்துறை அதிகாரி. சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தால் அங்கே வேறொரு பெண் பிணமாகக் கிடக்கிறார். கடத்தப்பட்ட பெண் எங்கே, இந்தப் பெண் யார் என்பதற்கான விடைகளைச் சொல்கிறது படம். இந்தப் படத்தையும் செப்டம்பர் 9 முதல் திரையரங்குகளில் காணலாம்.

Ottu

பிற படங்கள்

இது தவிர ஓணம் பண்டிகை என்பதால் மலையாளத்தில் சில படங்களும் வெளியாகின்றன. பிஜு மேனன் நடிப்பில் ‘Oru Thekkan Thallu Kesu’, மூத்த இயக்குநர் வினயன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘Pathonpatham Noottandu’, அரவிந்த் சாமி, குஞ்சாகோ போபன் நடிப்பில் ‘Ottu’ ஆகிய படங்கள் தமிழகத்திலும் வெளியாகின்றன.

OTT-யில் என்ன ஸ்பெஷல்?

உலகளவில் பிரபலமான தொடர்களான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் முன்கதையான ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ மற்றும் ‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ ஆகியவற்றின் அடுத்தடுத்த எபிசோடுகள் இந்த வாரம் வெளியாகின்றன. ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ எபிசோடை ஒவ்வொரு திங்களன்று காலை 6.30 மணிக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும், ‘தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ எபிசோடை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு அமேசான் பிரைமிலும் கண்டு ரசிக்கலாம்.

House of the Dragon

இதுபோக நெட்ஃப்ளிக்ஸில் ‘Indian Predator: Diary of a Serial Killer’ என்ற ஆவணத்தொடரின் (நிஜ க்ரைம் பற்றிய தொடர்) மூன்று எபிசோடுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகியிருக்கின்றன. இது சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘Indian Predator: The Butcher of Delhi’ ஆவணத்தொடரின் அடுத்த சீசன். நிஜமான குற்றச் சம்பவம், கொடூரக் கொலைகள், திடுக்கிட வைக்கும் காட்சிகள் எனப் பல இதில் உள்ளதால், வயது வந்தவர்களுக்கு மட்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.