வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள், சில வர்த்தக பொருட்களை பரிந்துரைக்கும்போது, அந்த நிறுவனத்துடனான தொடர்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளன.
தற்போதைய தகவல் தொழில்நுட்ப புரட்சியால், சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுபோல, ‘ஆன்லைன்’ வாயிலாக பொருட்கள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. இவற்றில் மோசடிகள் நடப்பதை தடுப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் நலத்துறை பல கட்டங்களாக ஆய்வுகள் செய்து, சில கட்டுப்பாடுகளை வரையறுத்துள்ளது. இவை, அடுத்த 15 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளோர், சில பொருட்களை பரிந்துரைக்கின்றனர்.

அவ்வாறு பரிந்துரைக்கும்போது, அந்த நிறுவனத்துடனான தங்களுக்குள்ள தொடர்பு குறித்து, அவர்கள் பதிவிட வேண்டும்.ஆன்லைன் வாயிலாக விற்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு முன், அதில் மற்ற பயனாளிகளின் விமர்சனங்களை பெரும்பாலானோர் பார்க்கின்றனர். அதன் அடிப்படையிலேயே குறிப்பிட்ட பொருளை வாங்குகின்றனர். இந்த விஷயத்தில், பல விமர்சனங்கள், பரிந்துரைகள் போலியானவையாக உள்ளன. இவ்வாறு பொய்யான, போலியான பரிந்துரைகள் பதிவிடுவதை தடுக்கவும், கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement