சுந்தர் பிச்சை எச்சரிக்கை, கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சி.. என்ன ஆச்சு..?!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமாகக் கருதப்படும் மைக்ரோசாப்ட், உபர், ஆப்பிள், டெஸ்லா மற்றும் மெட்டா போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மோசமான வர்த்தகம், வருமானத்தை எதிர்கொண்டு வருகிறது.

இதன் எதிரொலியாக அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குச் செல்லும் முன்பே பெரு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைப்பதில் ஈடுபட்டு உள்ளது. இதில் கூகுள் நிறுவனம் மட்டும் இதுவரையில் பணிநீக்கம் செய்யவிட்டாலும், கூகுள் அடுத்த காலாண்டு முடிவுகள் சிறப்பாக இல்லையென்றால் கட்டாயம் நிறுவனத்தில் பணிநீக்கம் மிகவும் மோசமாக இருக்கும் என ஊழியர்களை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் பிடி இந்த 5 நாடுகளிடத்தில்.. எப்படி தெரியுமா?

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை சமீபத்தில் கலந்துகொண்ட கோடு கான்பிரான்ஸ் நிகழ்ச்சியில் நிறுவனம் தற்போது இருக்கும் நிலையைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதலாகத் திறன் உள்ளதாக மாற வேண்டும், அனைத்து ஊழியர்களும் முழுமையாகப் பணியாற்றுகிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பேசியுள்ளார்.

 20 சதவீதம் உற்பத்தித் திறன்

20 சதவீதம் உற்பத்தித் திறன்

அதாவது நிறுவனத்தின் திறனை 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும், அதேநேரத்தில் ஊழியர்கள் முழுமையாக productive ஆகப் பணியாற்றுகிறார்களாக என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் உபரியாக இருக்கும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார மந்த நிலை
 

பொருளாதார மந்த நிலை

பொருளாதார மந்த நிலையில், உலகளவில் நிறுவனங்கள் விளம்பரத்திற்காகப் பெரிய அளவில் செலவு செய்யாமல் இருப்பது பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. காரணம் கூகுள் தனது வருமானத்தில் பெரும் பகுதி விளம்பர வருவாயை நம்பி தான் உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் எப்படிக் கூகுள் இயங்க போகிறது எனச் சந்தர் பிச்சையிடம் கேள்வி கேட்கப்பட்டது.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

ஒரு நிறுவனத்தில் முன்பை விடக் குறைவான ஊழியர்கள் இருக்கும்போது, அனைத்தும் முக்கியமான விஷயங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வேகமான பணியாற்ற ஊழியர்கள் துவங்குவார்கள். மேலும் உங்கள் பணியாளர்கள் உண்மையில் அவர்கள் பணிபுரியும் விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தால் கட்டாயம் பலன் கிடைக்கும். இதைத் தான் கூகுள் செய்ய விரும்புகிறது எனச் சுந்தர் பிச்சை கூறினார்.

வேகம்

வேகம்

ஊழியர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு விஷயத்திற்கு முடிவு எடுக்கத் தாமதமாகிறது. இதனால் ஊழியர்களின் உற்பத்தித் திறன், நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் குறைக்கிறது. இதைச் சீர்படுத்த தேவையான இடத்தில் அளவான ஊழியர்களை வைப்பதன் மூலம் இதைச் சரி செய்ய முடியும் எனச் சுந்தர் பிச்சை நம்புகிறார்.

கூகுள்

கூகுள்

இதன் மூலம் அடுத்த சில வாரத்தில் கூகுள் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கூகுள் நிறுவனமும் பணிநீக்கம் அறிவித்த மைக்ரோசாப்ட், உபர், ஆப்பிள், டெஸ்லா மற்றும் மெட்டா பட்டியலில் இணைகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sundar Pichai hints layoff at google; he want 20% more efficient, employees are really productive

Sundar Pichai hints layoff at google; he want 20% more efficient, employees are really productive

Story first published: Thursday, September 8, 2022, 14:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.