இந்தியாவில் முக்கிய மற்றும் பழமையான வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ன் தலைவர் சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் இந்தியாவில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒருவர விபத்தில் மரணம் அடைகிறார் என உலக வங்கியின் தரவுகள் கூறும் நிலையில், சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பின் இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக்கும் அலாரம் சிஸ்டம் கொண்ட வர ஆலோசனை நடத்தி வருகிறது.
கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!
6 ஏர்பேக் பாதுகாப்பு
அனைத்து கார்களுக்கும் 6 ஏர்பேக் பாதுக்காப்பு அளிக்கும் விதிமுறையை அமலாக்கம் செய்ய நிதின் கட்கரி ஆலோசனை நடத்துகிறார். இதற்கிடையில் இந்திய அரசு அமேசான் மற்றும் இதர ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குப் புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.
சீட் பெல்ட் கருவி
இந்திய அரசு அமெரிக்க ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான அமேசானிடம் சீட் பெல்ட் அலாரத்தைத் தடுக்கும் இயந்திரங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தியுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அலாரம் தடை செய்யும் கருவி
கார்களில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அலாரம் அடிக்கும் இதை நீக்க சீட் பெல்ட் போலவே இருக்கும் கிளப் போலவே ஒரு கருவி இருக்கும், அதைப் பயன்படுத்துவது மூலம் சீட் பெல்ட் அலாரம் ஓசையை நிறுத்த முடியும். இதை விற்பனை செய்வதை நிறுத்த அமேசானுக்கு இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
சைரஸ் மிஸ்திரி
இத்தகைய கருவிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட கருவிகள் அல்ல, ஆனால் சாலை பாதுக்காப்பு குறித்த முக்கியத்துவம் சைரஸ் மிஸ்திரி மரணத்திற்குப் பின்பு அதிகரித்துள்ளதால் இத்தகைய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
முக்கிய முடிவுகள்
சைரஸ் மிஸ்திரி மரணத்திற்கு மிக முக்கியமான காரணமாக, கார் வேகமாகச் சென்றதும், அவர் சீட் பெல்ட் அணியாததும் தான் முக்கியக் காரணமாக இருந்தது எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்களும், சாலை போக்குவரத்துத் துறையும் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.
நித்தின் கட்கரி
2021ல் மட்டும் சாலை விபத்து மூலம் இந்தியாவில் சுமார் 1,50,000 பேர் மரணம் அடைந்து உள்ளனர் என நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார். அமேசானில் விற்பனை செய்யப்படும் இந்தச் சீட் பெல்ட் கருவி வெறும் 249 ரூபாய் மட்டுமே.
Cyrus Mistry Death: Indian government asked Amazon to remove seat belt alarm blockers from selling
Cyrus Mistry Death: Indian government asked Amazon to remove seat belt alarm blockers from selling சைரஸ் மிஸ்திரி மரணம்.. அமேசானுக்குப் பறந்த உத்தரவு..!