டெல்லி: டிவிட்டரில் டிரெண்டிங் ஆன ட்வீட்களை ஆய்வு செய்த அந்நிறுவனம், டிரெண்டிங்கில் இடம்பெற்ற முதல் 3 அம்சங்களை வரிசைப்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ட்விட்டரில் டிரெண்ட் ஆன கோடிக்கணக்கான ட்வீட்களை ஆய்வு செய்த அந்நிறுவனம், ட்விட்டர் டிரெண்ட்ஸ் இந்தியா 2022 என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முதலீடு உள்ளிட்ட நிதி சார்ந்த உரையாடல்கள், இந்தியாவில் சமூகமயமாகி உள்ளதாக ட்விட்டர் தெரிவித்திருக்கிறது.
ஈக்விட்டி, பிளாக் செயின் உள்ளிட்ட நிதி சார்ந்த டிவீட்களே டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 62 சதவீதமாக இருந்த இந்தியர்களின் முதலீடு சார்ந்த உரையாடல்கள், தற்போது 185 விழுக்காடாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களால் கட்டமைக்கப்படும் உலகம் என்ற அம்சம் ட்விட்டரில் டிரெண்டிங்கில் 2வது இடம் பிடித்திருக்கிறது. இதில் திரைத்துறையை காட்டிலும் கிரிக்கெட்டிற்கு மவுசு அதிகரித்திருக்கிறது.