தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் கிட்டதட்ட 1700 டாலர்களை நெருங்கிய நிலையில் அதனை உடைக்காமல் முடிவில் 1727 டாலர்களுக்கு மேலாக முடிவடைந்துள்ளது.
ஆக உணர்வுபூர்வமாக 1700 டாலர்களை உடைத்தால் இது மேற்கோண்டு சரியலாம் என்று இருந்த நிலையில், இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது.
இது வரவிருக்கும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்ப்பின் மத்தியில், இந்த தடுமாற்றம் இருந்து வருகின்றது.
தங்கம் விலை மீண்டும் சரிவு.. கிட்டதட்ட 1 மாத சரிவில்.. இது வாங்க சரியான வாய்ப்பா?

ஏன் ஏற்றம்?
ஏற்கனவே சர்வதேச அளவில் மந்தமான வளர்ச்சியே காணப்படுகின்றது. இதற்கிடையில் மீண்டும் வட்டி அதிகரித்தால் அது மேலும் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆக இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

டாலர் Vs தங்கம்
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது, வளர்ச்சி சரிவடையலாம் என்ற அச்சத்தின் மத்தியில் சற்று வலுவிழந்து காணப்படுகின்றது. ஆக இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதாரவாக ஆமைந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தேவை சரியலாம்
நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பணவீக்கம் இன்னும் உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் ரஷ்யா பிரச்சனை, சீனா தாய்வான் பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில் சப்ளை சங்கியிலும் தாக்கம் இருந்து வருகின்றது. இது விலையேற்றத்திற்கு வழிவகுக்கலாம். இது மேற்கோண்டு தேவையினை குறைக்க வழிவகுக்கலாம்.

முக்கிய டேட்டாக்கள்
வரவிருக்கும் அமர்வுகளில் அமெரிக்காவின் தேவை குறித்தான தரவு, நுகர்வோர் விலை குறியீடு, உற்பத்தி குறித்தான தரவு என பலவும் வெளியாகவுள்ளது. ஆக இது மேற்கொண்டு வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் எட்டி பார்க்கும் கொரோனா
சீனாவின் சில பகுதிகளில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. இதனால் சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தங்கத்தின் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்தியாவில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பர்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1726.50 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், மீண்டும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.58% அதிகரித்து, 18.363 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
gold price on 8th September 2022: gold prices struggling around 1720 await fed powell’s speech
gold price on 8th September 2022: gold prices struggling around 1720 await fed powell’s speech/ தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. இன்றும் மீண்டும் சரிவா?